பக்கம்:உலகத்தமிழ்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உலகத் தமிழ்


அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9.500 பேர் உள்ளனர். அவர்களுள் எண்ணுாறு, தொள்ளாயிரம் பேர் தமிழ் நாட்டவர். ஆகவே அவர்கள் நம் நாட்டில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு அமைதியாகவும் நன்றாகவும் படித்துத் தங்களுக்கு நன்மையும் நாட்டுக்குப் பெருமையும் தேடிக்கொண்டு வர வாழ்த்தினேன். பாடத் திறமையோடு ஆங்கில மொழி அறிவும் நன்றாக இருந்ததால், அவ்விளைஞர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பட்டிக் காட்டுப் பரமசிவன்களுக்கு இவ்வாய்ப்புகள் வேண்டுமே? அவர்கள் ஆங்கில அறிவும் வளர்ந்தால் நன்மை.

டெஹ்ரான் விமான நிலையத்திலே பயணிகள் தங்குமிடத்தில் நான் கண்டதைச் சொல்லவேண்டும் அல்லவா? அங்கே மேனாட்டு நாகரிகம் விரைந்து பரவுகிறது. பெண்களில் பலர், மேனாட்டுப் பெண்களைப் போலக் கெளன் அணிந்திருந்தனர். முழங்காலுக்கு மேல் ஆன கெளன் போட்டுக்கொண்டிருந்த அவர்கள் ஏனோ முக்காடும் போட்டிருந்தார்கள்; 'பர்தா'வின் பயன் எதையும் அந்த முக்காடு கொடுப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் குட்டைக் கௌன் அணிந்திருந்த பெண்கள் அதை ஏன் விடவில்லை? நெடுநாளாகத் தொடரும் பழக்கம், பயன்படாத போதும், நீங்காச் சுமையாகத் தொடர்வதற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும்.

முக்காடில்லாத, குட்டைக் கெளன் அணிந்த இளம் பெண்கள் இருவர் பயணிகளிடம் ஆங்கில வினாத்தாள்களை வழங்கினர். காலமெல்லாம், வினாத்தாள்; அது வெளியாகாமல் இருக்க வேண்டுமே; தவறாகாதிருக்க வேண்டுமே; பாடத் திட்டத்திற்கு அப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/15&oldid=480448" இலிருந்து மீள்விக்கப்பட்டது