பக்கம்:உலகத்தமிழ்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்

21

கண்டேன். ஆண்கள் தலைமுடிமட்டுமன்று காடாக வளர்ந்திருப்பது, பெண்கள் தலையும் புதாகாடு-பெருங்காடு எனத் தோன்றும். இது அங்கு வளர்ந்துவரும் நாகரிகம். மக்கள் காட்டுக்காலத் தோற்றத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள் போலும்!

தோற்றமிருக்கட்டும். பழக்கவழக்கத்தைக் கவனிப்போம். அவர்களைப் பார்க்கிறபோது, ‘ஆயிரம் ஆயிரம் ஒளிகொள் வழியில் இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்’ என்ற பாரதிதாசனின பாடல் நினைவிற்கு வந்தது. சுறுசுறுப்பு, அநேகமாக மேனாட்டு மக்களின் மூச்சாகவே மாறிவிட்டது. மெல்ல, ஆடி அசைந்து நடத்தல் உல்லாசப் போதில் மட்டுமே. மற்ற நேரங்களில் ஒட்டமும் நடையுமாகவே பார்க்கமுடியும் கறுசுறுப்பும் உழைப்புமே ஜெர்மானிய மக்களை முன்னுக்குக் கொண்டு வந்தன.

ஜெர்மானியை நினைக்குமபோது என் வயதினருக்கு உலகப் போர் இரண்டும் நினைவிற்கு வரும். ஜெர்மானியப் பேரரசை விரிவுபடுத்தி அதன் ஆளுகைக்குள் பல நாடுகளையும் கொண்டுவர முயன்றதன் விளைவு முதல் உலகப் போர். அது கி.பி. 1914 முதல் 1918 வரை கடந்தது. அது விற்போரன்று; ஈட்டிப் போரன்று; வாட்போரன்று; பெருஞ் சேதம் விளைவித்த போர். முடிவு என்ன? ஜெர்மனி தோற்றது . இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய காடுகளின் நேசக் குழு வென்றது. போரில் வென்றவன் வாழ்க்கையில் வென்றவனல்லன் போரில் தோற்றவன் நாட்டில் தோற்றவனல்லன்.

ஜெர்மனியின் தோல்வி, அந்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க உதவிற்று மக்கள் ஆட்சியின்பேரால் இனவெறி எழுந்தது; வளர்ந்தது. இட்லர் என்பார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/20&oldid=480480" இலிருந்து மீள்விக்கப்பட்டது