பக்கம்:உலகத்தமிழ்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்

23

மிழந்து, வலிவிழந்து, பொருள் இழந்து, வீடிழந்து, தொழிற கூடமிழந்து சுடுகாடாகிக் கிடந்தது. இருபத் தைந்து ஆண்டுகளுக்குமுன் அந்நிலை.

வீரன் வீழ்வதுண்டு; அழுவதில்லை; அயர்ந்து கிடப் பதுமில்லை. தகாத தலைமைக்கு ஆட்பட்டு, தகாத செயலில் இறங்கி, தகாத வழியே சென்று முரிந்து வீழ்ந் தார்கள் ஜெர்மானிய மக்கள், தகாத வழி சென்றாலும் ஆண்மையாளர் அல்லவா ஜெர்மானியர்!. எனவே, தோல்வியை எண்ணி ஏங்கி ஏங்கி குறை சொல்லிக் காலத்தை விணாக்கவில்லை. மாறாக, எழுந்தார்கள்; நிமிர்ந்தார்கள்; உழைத்தார்கள், ! உள்ளன்போடு உழைத்தார்கள்; உண்மையாக உழைத்தார்கள்; உறுதியாக உழைத்தார்கள்; கூடுதலாக உழைத்தார்கள்; குறிக்கோள் தெளிவோடு உழைத்தார்கள்.

ஆம்! “அமைதியாக வாழ்வோம். ஆனால் யாரையும் அண்டி வாழோம், வளமாக வாழ்வோம். ஆனால் வாங்கி வாங்கி வாழோம். தாங்களே தனக்குதவி எனவே நம் நாட்டை நாமே கடின உழைப்பால் உயர்ந்துவோம்,” என்று தெளிந்து, அக்குறிக்கோளை அடைய அனைவரும் பாடுபட்டனர். நாடு என்ன கொடுத்தது என்று கோபிக்கவில்ல. தோல்வியடைந்தாலும், நாட்டுக்கு "நாம் கொடுப்போம்" என்று கூடுதல் தொழில் செய்தனர் புதிய ஜெர்மானியர். வாங்கும் சம்பளத்திற்கு குறிப்பிட்டக் காலம் முழுவதும் நொடியும் வீணாக்காது பாடுபட்டனர். முழுக் கவனத்தோடு தொழில் புரிந்தனர். ஊதியத்திற்கான வேலையோடு நின்று விடாமல் நாட்டுத் தொண்டாக நாள் தோறும் ஊதியம் இல்லாப் பணியினை ஒரு மணி நேரம் செய்தானர். எனவே தொடர்ந்து சில ஆண்டுகள் இப்படிச் செய்ததால் தொழில்கள் வளர்ந்தன, வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/22&oldid=480550" இலிருந்து மீள்விக்கப்பட்டது