பக்கம்:உலகத்தமிழ்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்

25

தொண்டுபுரிய முடிவு செய்தார் ஆல்பர்ட் சுவைட்சர். பிழைக்க வழியின்றிப் போனாரா? பிஜிக்கும் நெட்டாலுக் கும் மோரிசுக்கும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் போக வேண்டிய நிலையை நம்மவருக்கு ஏற்படுத்தினோமே, அதைப் போன்ற நெருக்கடியால் காங்கோவிற்குக் குடி யேறினரா சுவைட்சர்? இல்லை, இல்லை.

தத்துவப் பேராசிரியர் பணியில் வீற்றிருந்த டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் தம் இருபத்தேழாம் வயதில் கவனிப்பாரற்று நோய் நொடியில் மடிந்து கொண்டிருந்த காங்கோ மக்களுக்கு மருத்துவஞ் செய்து தொண்டுபுரிய விருப்பங்கொண்டார். ஜெர்மானிய நாட்டின் மருத்துவப் படிப்போ நீண்டபடிப்பு; ஏழாண்டுப் படிப்பு. ஏற்கெனவே தத்துவத்தில் பேரறிஞர். டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராக விளங்கிய சுவைட்சர், இருபத்தேழு வய திற்குமேல் புதிய நீண்ட மருத்துவப் படிப்பில் முனைந் தார்; தவறாமல் தேறினார் முப்பத்து நான்காவது வயதில் காங்கோவிற்குச் சென்றார்.

அன்றைய காங்கோவில் பெரிதும் காட்டுக் கால நிலை. மாட்டுத் தொழுவமே அவருக்குக் கிடைத்தது. அதில் மருத்துவமனையைத் தொடங்கினர். உயிர்களைப் போற்றல் அவரது சமயம்; அவரது நெறி, அவரது வாழ்க்கை. இலட்சக்கணக்கான நோயாளிகளைக் குணப் படுத்திய இப் பேரறிஞர் சுவைட்சருக்கு, ‘மக்கட் சேவைக்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது. அது அவருக்குப் பெருமையன்று, மக்கள் இனத்தின் நன்றி யுணர்ச்சிக்கு அடையாளம்.

பரிசுப் பணத்தை மருத்துவ சாலைக்குச் செலவிட்டார். அடிக்கடி ஐரோப்பாவிற்குச் சென்று காங்கோ

உ. த.-2 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/24&oldid=480549" இலிருந்து மீள்விக்கப்பட்டது