பக்கம்:உலகத்தமிழ்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜினிவாவில் முதல் நாள்

31

பட்ட படகுத் துறைகள உள்ளன. விசைப் படகுகள் வந்து தங்கி ஆட்களை இறக்கவும் ஏறறவுமான துறைகள ஏரியில் உள்ளன.

பயணப் படகுகள் மட்டுமல்ல, ஏரியில் காண்பது. ஏராளமான உல்லாசப் படகுகளும் உள்ளன.

அதோ துடுப்புப் படகு அது ஒரு வகை. இதோ மிதி படகு இது ஒரு வகை. முந்தியதைச் செலுத்தப் பயிற்சி தேவை. பிந்தியதற்கு அவ்வளவு பயிற்சி தேவை இல்லை. பிந்தியது ஆபத்துக் குறைவானது. அதில் இரு பெடல்கள் உள்ளன. இருவர் உட்கார்ந்து கொண்டு, ஆளுக்கொரு பெடலை மிதித்தால் படகு ஒடும். விரும்பிய படி திருப்பச் சுக்கான் உண்டு. பல துடுப்புப் படகுகளும் மிதிபடகுகளும் மிதக்கின்றன. பாய்ப் படகுகளும் செல்லுகின்றன. பாய்ப் படகுகளைச் செலுத்தத் திறமையும் பயிற்சியும் அதிகம் வேண்டும். இத்தனை வகைப் படகுகளும் வாடகைக்குக் கிடைக்கும். உடம்பு நோகாமல் படகுப் பயணம் செய்ய விரும்புவோர்க்கும் வசதி உண்டு. விசைப் படகுகள் ஏராளம்.

அவற்றை அமர்த்திக் கொண்டு ஏரியில் நெடுந்துரமோ, சிறிது தூரமோ சுற்றி வரலாம்.

மிதி படகைப் பத்து பன்னிரண்டு வயது சிறுவர் சிறுமியர் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். பெரியோர் துணைகூட இல்லாமல் ஏரியில் சுற்றிவிட்டு வருகின்றனர்; தம் முயற்சியிலும், அஞ்சாமையிலும் தாமே செயல் புரிவதிலும் மேனாட்டுச் சிறுவர் சிறுமியர் இளமையிலேயே பழகுவதைக் கண்டோம். போற்ற வேண்டிய பழக்கந்தானே இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/30&oldid=480556" இலிருந்து மீள்விக்கப்பட்டது