பக்கம்:உலகத்தமிழ்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

உலகத் தமிழ்


சுவிஸ் நாட்டு நெடுஞ்சாலைகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ; ஒரே திசையில் மூன்று கார்கள் செல்லும்படி சாலைகள் அகன்றுள்ளன. வழி நெடுகிலும் கோடிட்டுத் தடம் பிரித்துள்ளனர். ஒரு தடத்திலிருந்து மறு தடத்திற்குச் சட்டென்று மாறினால் தீங்கு: சனி, ஞாயிறுகளில் பெருந் தீங்கு.. ஒவ்வொரு தடத்திலும் சங்கிலித தொடர்போல வரும் வண்டியோடு மோத நேரிடும். ஆகவே முன்கூட்டியே, பின் விளக்கையும் கைகாட்டியையும் போதிய தூரம் போட்டுக் காட்டிய பிறகே, தடம் மாறலாம்.

ஜினிவாவில் இருந்த நாங்கள் அன்னசிக்கு விரைந்தோம். வெளியூர் மக்கள் ஜினிவாவை நோக்கிப் பறந் தனர். மொத்தத்தில் சாலையெல்லாம் கார் மயம்; நினைக் கும் முன் பறக்கும் கார்மயம். அன்னசியை அடைந்தோம். இடந்தேடிக் காரை நிறுத்தினோம். மேனாட்டு நகரங்களில் கார் வாங்குவது எளிது. அதை நிறுத்த இடம் பிடிப்பது அரிது. குடியிருக்கும் பல குடும்பங்களுக்கும் கார் இருக்கும். அத்தனை கார்களையும் தெருவிலே கூட, வீட்டின் முன்பே நிறுத்த முடியாது. அக்கம் பக்கத்திலும் அலைந்தே இடம் காண வேண்டும்.

அன்னசி அழகிய ஊர். அது பிரான்ஸ் நாட்டில் உள்ளது. அங்கு ஏரியொன்று உண்டு ஜினிவா ஏரியளவு பெரியதன்று. ஆயினும் வசீகரமானது; பயணிகளை ஈர்ப்பது. அந்த ஏரியில் படகில் சுற்றிவரக் கருதினோம்

காரைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டோம் புறப்படு வதற்கு முன்னே தாகசாந்தி செய்து கொண்டோம். வகைவகையான பழச்சாறுகளை டப்பாக்களில் நிரப்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/41&oldid=480991" இலிருந்து மீள்விக்கப்பட்டது