பக்கம்:உலகத்தமிழ்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டைவிட்ட கோட்டை

47

உள்ளது போல இரண்டு முட்கள் இணைந்துள்ளன. ஒன்று மணி காட்டுகிறது; மற்றொன்று நிமிடத்தைக் காட்டுகிறது. நான், 1951ல் என் மனைவியோடு, ஜினிவா போனபோது இம் மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அன்று போல், இன்றும் அது பசுமையாகவே இருக்கக் கண்டேன்.

முன்பு உலக நாடுகளின் கழக (League of Nations’) அலுவலகமாயிருந்து, இப்போது ஐக்கிய நாடுகளின் அவைக்குரிய பிராந்திய அலுவலகமாக இருக்கும் பெரிய அழகிய கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தோம். அவை மண்டபம், குழு அறைகள் எங்களைக் கவர்ந்தன. அவை மண்டபப் படுதாக்கள் இந்தியப் பட்டால் ஆனவை. அவற்றை இந்தியா ஆதியில், தனது நன்கொடையாக வழங்கிற்று என்று கேள்விப்பட்டுப் பெருமிதம் கொண்டோம்.

அவை மண்டபத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அவைத் தலைவர் இடத்தில் அமர்ந்து பார்த்தால் என்ன என்கிற குறும்பு எண்ணம் எழுந்தது ஒருவருக்கு. அதன் மாண்பினைக் குறைக்கும்படி கருதக் கூடாது என்று அவரை நெறிப்படுத்தி அழைத்து வந்தார் மாண்புமிகு மதியழகன்.

அன்றிரவு அனைவர்க்கும் நண்பர் சிதம்பரநாதன் வீட்டில் விருந்து சன்ன அரிசிச் சோறும், சாம்பாரும், ரசமும், தயிரும், பூரியும், காய்கறிகளும் ஜினிவாவில் இருக்கிறோமென்பதையே மறக்க வைத்தன. நல்ல சமையல்; நல்லுபசாரம்: விருந்தோம்பலும் பிரமாதம். அவரவர் ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவாகி விட்டது.

அடுத்த நாள் பிற்பகல், மாண்புமிகு மரைக்காயரும், மாண்புமிகு மதியழகனும் ரோமிற்குப் புறப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/46&oldid=480996" இலிருந்து மீள்விக்கப்பட்டது