பக்கம்:உலகத்தமிழ்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உலகத் தமிழ்


‘எங்கள் ஊருக்குள் எந்த மாற்றுக் கட்சியான் தலை காட்டுகிறான் பார்க்கலாம்’ என்று காட்டுக்கால தர்பார் நடத்திய ஊர்த்தலைவர்களைப் பற்றி, நான் சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டதுண்டு. அந்நிலை நினைவிற்கு வந்தது.

ஊருக்குள் நடந்து அதன் உச்சியில் இருக்கும் கோட்டைக்குச் சென்ருேம். ஊர் சிறியது. ஒரே தெரு. இரு மருங்கிலும் பழைய வீடுகள். கோட்டைக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு. அந்த வசூலைக் கொண்டு கோட்டையை நன்கு பராமரிக்கிறார்கள். கோட்டை அமைந்துள்ள இடம் அக்காலப் பாதுகாப்பிற் குத் தக்க இடம். பழைய அரண்மனையைக் காணும் போது, அக்கால மன்னர்களைப் பற்றி எனக்குப் பரிதாபம் ஏற்படும், ஏன்? இன்று நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்க்கும் கிடைக்கும் ஓடுநீர் வசதி, மின்சார விளக்கு வசதி, குளியல் வசதி, அக்கால மன்னருக்குக் கிடையாதே!

இக் கோட்டையின் வரலாறு வேடிக்கையானது. அதற்கு உரிய கடைசிப் பிரபு ஒர் ஊதாரி. கடன் வாங்கிச் செலவு செய்து வந்தான். கடனில் மூழ்கி விட்டான்; கோட்டைவிட்டான். கோட்டை ஏலத்திற்கு வந்தது. செல்வன் எவனோ ஏலமெடுத்தான். பல்லாண்டிற்குப் பின் ஊருக்குக் கொடுத்துவிட்டான்.

இவ்வூர் பாலாடைக்கு, சீஸ்’ஸ்-க்கு நெடுங்கால மாகப் பெயர் போனதாம். அங்குள்ள மாடிக் கட்டடம் ஒன்றின் வயது முந்நூறுக்கு மேல். தெருவின் இரு மருங்கிலும் சிற்றுண்டிச்சாலை. தெருவைக் கூழாங்கற்கள் பதித்து உருவாக்கியுள்ளனர். தெருவைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/49&oldid=480999" இலிருந்து மீள்விக்கப்பட்டது