பக்கம்:உலகத்தமிழ்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. பேராசிரியர்களின் பணி

ஜினிவாவை விட்டுப் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், ஏர்பிரான்ஸ் விமானம் 3-30 மணிக்குப் பாரிசை அடைந்தது. இறங்கித் தரை மேல் நின்றது; கதவு திறக்கப்பட்டது . ஏணி பொருத்தப்பட்டது. ஆயினும் யாரும் இறங்காதபடி வாசற்படியில் நிறுத்தப்பட்டோம் ஏன்? விமானத்திலிருந்து அழைத்துக் கொண்டு போக வேண்டிய பேருந்து வண்டி வந்து சேரவில்லை. ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பின் வந்து சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கி பேருந்து வண்டியில் வெளியே சென்றோம்.

ஜினிவாவில் விமானக் கம்பெனியார்கள் பெட்டியை எடை போட்டு எடுத்துக் கொண்டார்கள். அப்போது நம் ஊர்களில் கொடுப்பது போல அட்டைச் சீட்டு கொடுக்கவில்லை. தவறிவிட்டார்களோ என்று சீட்டைக் கேட்டேன்.

‘சீட்டு இல்லை. பாரிசு விமான நிலையத்தில் சீட்டேதும் காட்டத் தேவையில்லே. அவரவர் மூட்டையை அவரவர் சும்மா எடுத்துக் கொள்ள வேண்டியதே’ என்று பதில் வந்தது.

அப்படியே பாரிசில் என் பெட்டியைக் கண்டதும் யாரிடமும் எந்தச் சீட்டும் கொடுக்காமல் அதை எடுத்துக் கொண்டேன்.

விமான நிலையத்தில் இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த திரு அய்யர், சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் காசி ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/60&oldid=481011" இலிருந்து மீள்விக்கப்பட்டது