பக்கம்:உலகத்தமிழ்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாசக்கருவிலே மானுடம்

69

அகழ்ந்தெடுத்து அன்பு நீரில் கழுவி அமைதிப்பண்டம் செய்யலாமே! இப்படியும் பாய்ந்தது என் மனக் குரங்கு.

அவ்வேளை பார்த்துப் பேரணியும் முடிந்தது. நாங்கள் திரும்பினோம். அணிவகுப்பு நடந்த இடத்திற்கு அருகில், பெரிய மாதா கோயில் உள்ளது. ‘மகதலேன் மாதா கோயில்’ என்று பெயர். கம்பீரமாக எழுந்து விளங்கும் அது பழமையானது. பல படிகள் ஏறி உள்ளே சென்று பார்த்தோம். வேடிக்கை பார்ப்போர் கூட்டம் பெரிது. இதற்கிடையில் தொழுவோர் சிலர். சந்தை இரைச்சலிலே மக்கள் கூடி வழிபட வேண்டியுள்ளதை இது நினைவூட்டியது.

பகல் உணவை அருகில் இருந்த உணவுச்சாலையில் முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு ‘மெட்ரோ’வில் திரும்பினேன்.

பிற்பகல் மாநாட்டுத் தகவல்களைப் படித்து அறிந்து கொண்டேன். மாலைப் பொழுதை அருகிலிருந்த ‘லக்ஸம்பர்க்’ பூங்காவில் தனியே கழித்துவிட்டு ‘தானே பரிமாறிக்கொள்ளும்’ உணவு விடுதிக்குச் சென்றேன். பிரஞ்சு மொழி தெரியாததோடு, காய்கறி உணவினனாகவும் இருந்தது தொல்லையாக இருந்தது. அரை வயிறு உண்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.

திரு ம பொ. சி. அவர்கள் இரவு வந்து சேர்ந்தார். நான் தங்கியிருந்த ஒட்டலிலே தங்கினர். ஒருவருக்கொருவர் துணை. அங்காவது கெருக்கமாகப் பழக வாய்ப்புக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/68&oldid=481127" இலிருந்து மீள்விக்கப்பட்டது