பக்கம்:உலகத்தமிழ்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. பாரிசில் தமிழ் முழக்கம்

மாநாட்டன்று குறித்தநேரத்திற்கு முன்பே நானும் திரு. ம. பொ. சியும் மாநாட்டுக்குச் சென்றோம். எழுபது எண்பது பேர் போலப் பல நாடுகளிலிருந்தும் வந்திருந் தனர். இலண்டனிலிருந்து ஐம்பது தமிழர்கள் மறுநாள் பேருந்து வண்டியிலேயே வந்து சேர்ந்தார்கள்.

மாநாடு உரிய காலத்தில் தொடங்கிற்று. தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கலந்து கொண்டார். அவர் அப்போது யூனெஸ்கோவின் பேரியக்குநராக இருந்தார். அவர் மும்மொழியில் முழங்கினார். பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரை நிகழ்த்தினர். ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசியதன் மூலம் நம் தாய் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உலகறியச் செய்தார்; நம்மோடு வாழ்பவர்களே நேற்றுவரை ‘மதராசி மொழி’ என்று சொல்லக் கேட்டுக் குமுறிய நமக்கு, உலகமெல்லாம் தமிழைப்பற்றி அறியச் செய்தது வான் மழையாக இருந்தது. நெடுநாள் நாப்பழக்கம் இன்மையால், அவரது தமிழ் ‘மழலை’யாக இனித்தது. பாரிசில் உலகக் கருத்தருங்கில் தமிழை முழக்கிய அவருக்கு நம் நன்றி.

பேரறிஞர் ஆதிசேஷய்யாவின் மொழி, மழலையாக இனித்தது. கருத்தோ முதிர்ந்து சிந்திக்க வைத்தது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல், குறையாமல், நிலைத்திருக்கும் தமிழ் மொழியே தமிழ் மக்களின் இடையறாத தொடர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகும். இது சமுதாயததின் சிறப்பு மொழியாக, மதம், கல்வி போன்ற துறைகளுக்கு மட்டும் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/69&oldid=481130" இலிருந்து மீள்விக்கப்பட்டது