பக்கம்:உலகத்தமிழ்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உலகத் தமிழ்


மொழியியல் அடிப்படையிலும் அடையாளம் காண வேண்டும். இதுவரை நடந்திருக்கும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திராவிட மொழியாக இருக்கக்கூடும். என்று சொல்லலாமே ஒழிய, ‘திராவிட மொழிதான்’ என்று கூறுவதற்கு இல்லை. இது திரு. சுவலபில் கருத்து. திரு. சுவலபில் அவர்களைத் தமிழை வளர்க்க வந்த அக்கால அவதாரமாக உச்சிமேல் வைத்துப் போற்றியவர்கள் உண்டல்லவா? அவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

அடுத்து திரு. ஐ. மகாதேவன் சிந்துவெளி எழுத்தைப்பற்றிப் பேசினர்; பர்போலாவைப்போல் கம்ப்யூட்டரை வைத்து ஆராயவில்லை. வேறு வழியில் ஆராய்ந்தாராம். சிந்துவெளி எழுத்து திராவிட எழுத்தே என்ற முடிவிற்கு வந்துள்ளதாக விளக்கினார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது நூலில் தெளிவாகவும் விவரமாகவும் பார்த்துக்கொள்ளச் சொன்னர். சுவலபிலால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு மகாதேவன் மருந்து முழுக்கப் பயன்பட்டதோ என்னவோ?

“முன்பு, தமிழ் எழுத்து பிராம்மி எழுத்திலிருந்து வந்த தென்றும் சொன்னவரல்லவா இவர்?” என்று இடைவேளை முணுமுணுப்பு என் காதில் விழுந்தது.

“கருத்து முதிர்ச்சி காலத்தின் இயற்கை விளைவல்லவா?” என்றேன்.

கருத்தரங்கில் திரு. மகாதேவன் பேசியதும் சிந்து வெளி எழுத்தைப்பற்றிக் கேள்வி கேட்க ஒருவர் முயன்றார் பயனில்லை. பதில் இதோ:

‘இங்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரமோ சிறிது. எடுத்துக் கொண்டுள்ள பொருளோ பெரிது. இதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/79&oldid=481173" இலிருந்து மீள்விக்கப்பட்டது