பக்கம்:உலகத்தமிழ்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உலகத் தமிழ்


முடிவு செய்யப்பட்டது. எங்கே நடத்துவது? மலேசி யாவின் தலைநகரான கோலாலம்பூரில் முதல் கருத்தரங்கு. அங்குத் தமிழர் மிகப் பலர்; எனவே கருத்தரங்கு மாநாடாக வளர்ந்துவிட்டது.

புலவர் சிலர், ‘உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிவதற்குப் பதில்’ பெருமக்கள் நூற்றுக் கணக்கில் கூடும் மாநாடாகிவிட்டது. அடுத்துச் சென்னையில் கூடியது கருத்தரங்கு. சென்னே தமிழ் நாட்டின் தலைநகர மல்லவா? காதுங்காதும் வைத்ததுபோல் கருத்தரங்கு நடத்த முடியுமா? அக் கருத்தரங்கு, உலகம் புகழும் மாநாடாக, பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்திருந்து கேட்கும் மாநாடாக உருப்பெற்றது. உலகப் புகழ்பெற்ற இதன் சிறப்பினை நான் கூறத் தேவையில்லை

மூன்றாவது கருத்தரங்கு பாரிசில் கூடியது, பாரிசில் உள்ள தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாமல்லவா? இங்கேயாவது, ‘புலவர்களுக்குள்ளே கருக்தரங்காக்கி விடலாம்’ என்று நினைத்தார்கள் போலும். நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. இங்கும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட அதிகம் பேர் கூடிவிட்டோம். உள் நாட்டுத் துணையேதுமின்றித் துணிந்து நடத்தி விட்டார்கள் மாநாட்டை.

தமிழ் இலக்கியமும் கலையும் விரிந்தன. எவ்வளவோ அழியவிட்ட பிறகும் விரிந்து கிடக்கின்றன. எனவே நான்கு நாள் கருத்தரங்கில் தமிழ்த்துறையின் அடியும் முடியும் காட்ட முடியுமா? காட்டும் வித்தையைக் கையாள முயலாவிட்டால் சும்மாவிடுவோமா? முடியாததை முடித்துவைக்க முயன்றனர் மாநாட்டு அமைப்பாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/81&oldid=481178" இலிருந்து மீள்விக்கப்பட்டது