பக்கம்:உலகத்தமிழ்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 14 ஓரடி உயர்ந்தோம்

தேநீர் அருந்திய பின்னர், மீண்டும் கூடினோம். தமிழ்நாட்டில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய கட்டுரையை திரு.நாகசாமி படித்தார்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ் நாட்டுத் தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலபொருள் துறை புதுச்சேரியிலுள்ள இந்தியக் கழகம் ஆகியவை நடத்திய ஆய்வுகளைச் சுட்டிக்காட்டினார். அவை, அவ்வப்போது, ஆங்காங்கே, கண்ட உண்மைகள் அனைத்தையும் சொல்ல நேரமேது? எனவே சிற்சில தகவல்களைச் சுட்டினார்.

புகழ்பெற்ற பாண்டியர் துறைமுகம் கொற்கை. நூறாண்டுகளுக்கு முன், டாக்டர் கால்ட்வெல் கொற்கையில்யி நடத்திய ஆராய்ச்சியை நினைவிற்குக் கொண்டு வந்தார்.

டாக்டர் கால்ட்வெல்லின் ஆராய்ச்சி முடிவுகளேத் தமிழில் நூலாக்கி வெளியிட்டால் என்ன என்று தோன்றிற்று. காதல், அரசியல் ஆகியவற்றிற்கு அப்பால் எதைப் படிக்கப் போகிறோம் என்று குறுக்குச்சால் ஒட்டிற்று சிந்தனை. நாம் படிக்காவிட்டாலும், வெளி நாட்டாராவது படித்து தொடர்ந்து ஆராய்ந்து, உலகறியச் செய்தார்களே என்றது அதே மூளை.

தமிழ் நாட்டின் தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் கொற்கையில் ஆய்வு நடத்திற்றாம். கி.மு முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தேதி குறிக்கக்கூடிய எழுத்துகள் குறித்த மண்பாண்டங்கள் கிடைத்தனவாம். புதையுண்ட முத்துச் சிப்பிகள் நிரம்மக் கிடைத்தனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/84&oldid=481181" இலிருந்து மீள்விக்கப்பட்டது