பக்கம்:உலகத்தமிழ்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரடி உயர்ந்தோம்

87

கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று. முடிவு செய்துள்ளனர். அதாவது, காவிரிப்பூம்ப்ட்டின: புத்த விகாரம் 1600 ஆண்டுகளுக்கு முந்திய பிராகிருத நூலில் குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தொன்மையானது புகார் நகரம். இன்னும் எவ்வளவு தொன்மையானது? தொடர்ந்து ஆராய்ந்தால் தெரியும்.

தொன்மை வாய்ந்த நாகரிகத்தை, மொழியை, இலக்கியத்தை, கலைகளை, சிற்பங்களை ஆராய்வோர்க்கு ஒரு துறைப் புலமை போதாது; பல துறைத் தொடர்பு தேவை. ஒரு மொழிப் புலமை போதாது; பல மொழிப் புலமை தேவை. பல்வேறு துறையில் உயர்ந் தவர்களோடு தொடர்பு கொண்டு, உண்மைச் சிதரல் களை இணைத்து, மெய்யுருவம் கொடுக்கும் நோக்கும் போக்கும் தேவை.

சிற்பக்கலை ஆய்வு தட்டுப்படும்போது, ஆகம அறிவு, விளக்கந்தரும். தமிழ் ஆராய்வு திகைப்பை ஊட்டும்போது, பிராகிருத நூலறிவு வழிகாட்டுகிறது. மொழியறிவும் திட்டவட்டமாகக் காட்டக் கூடாததை புதிய விஞ்ஞான ஆய்வு முறைகளும் கருவிகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

எல்லோரும் எல்லாத் துறைகளிலும் விற்பன்னர் ஆதல் அரிது; பலமொழி மேதையாவதும் அரிது. அதற்காக, ஒன்றே போதும் என்பது ஆராய்ச்சிக்கு ஆகாது. செல்லும் வாயெல்லாம் சென்று, அவ்வத் துறை வல்லுநர்களையும் பயன்படுத்திக் கொண்டு ஆராய்ந்தால், அறிதற்கு அரிய நம் தொன்மையை ஒரளவாவது உலகறியச் செய்யலாம். பெறற்கரிய பெருமை, நமக்குள்ளே மட்டுமன்றி, உலக அறிஞர்களிடமும் பெறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/86&oldid=481183" இலிருந்து மீள்விக்கப்பட்டது