பக்கம்:உலகத்தமிழ்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

உலகத் தமிழ்


ருடன் கலந்து வாழ்ந்தது. இக்காலம் இளந்தமிழராவது அந்நாகரிக வரலாறுகளில் மூழ்கி, நம் சிறப்பினையும் தொடர்பினையும் ஒளிவிடச் செய்யும் முத்துக்களை எடுத்துவர மாட்டார்களாவென்று எங்கள் நெஞ்சம் ஏங்கிற்று.

மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் இல்லை. இதனால் தமிழர் பலருக்குக் காப்பு. அவர்களுக்குத் தமிழ் ஒலிக்காதா என்ற ஏக்கம்.


15. மாநாட்டு உரைகள்

பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழும் பிற கலாசாரங்களும்’ என்பது பற்றி அரிய கட்டுரையொன்றைப் படித்தார். தமிழர்களும் தாய் மொழியும், இந்திய மொழிகளோடும் கீழை நாடுகளோடும் கொண்டிருந்த தொடர்புகளை உறவுகளை, கோடிகாட்டினார். பக்தி இயக்கம் தமிழகத்திலே பிறந்து, இந்தியாவின் பிற பகுதிக்குப் பரவிற்று என்று விளக்கினார். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவர்களின் முதல் தேவாரப்பாடல்கள் தாய்லாந்தில் மந்திரங்களாகப் பாடப்படுவதாகக் கூறினார். சையாமில் திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதைக் கூறினார். ஆதியில், அவர்களிடம் தமிழ்ப் பண்பைப் பரப்பியதை நினைவு படுத்தினார். பேராசிரியரது தமிழ்மொழி வரலாறு என்னும் நூலில் இவற்றை விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் மு.வ. சங்ககால இலக்கியம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை கொடுத்தார். எவை எவை துாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/89&oldid=481961" இலிருந்து மீள்விக்கப்பட்டது