பக்கம்:உலகத்தமிழ்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

உலகத் தமிழ்


பிரஞ்சு-தமிழ் அகராதி தந்த பாதிரிமார்களின் தொண்டைக் குறிப்பிட்டுப் போற்றினார்.

இயற்கையிலே மேன்மை பெற்ற தமிழ், புதுவைப் பெரு நிலத்தில் புத்துணர்வு பாய்ச்சும் நாட்டுரிமை பெற விழிப்பூட்டும்—-விடிவெள்ளியாக விளங்கலாயிற்று. இதை எடுத்துக்காட்டிப் பாரதியாருக்கு அடைக்கலம் தந்து, அவரது நாட்டுணர்வுக் கனலை, அவியாது காத்து, அதனால் உரிமையுணர்வூட்டும் தமிழைப் புதுவை வளர்த்தது’ எனப் பெருமை கொண்டார்.

படித்த புலவர்களிடையே தவழ்ந்து வந்த தமிழ் நடையைப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவில் எழுச்சி தரும் எளிய தமிழ் நடையாக மாற்றியது பாரதியாரின் தனிச் சிறப்பாகும். திரு. மரைக்காயரின் கூற்றை யாரே மறுப்பார்? புலிக்குச் சிங்கம் பிறந்தது போல் பாரதிக்குப பிறகு பாரதிதாசன் விளங்கினார்’ என்றார்.

‘தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பாரதி தாசன் பாடல்கள் கால்கோள் விழாக்கள் எடுத்தன. தமிழர்களிடையே புரட்சி மனப்பான்மை துளிர்க்கலா யிற்று என்பதையும் நினைவூட்டினார்.

‘தமிழர்களிடம் மறைந்து கிடந்த மொழியுணர்வைத் தட்டியெழுப்பப் பாரதிதாசன் பாடலகள் பேராற்றல் உடையவனவாக விளங்கின’ என்று அவர் கூறிய போது எம் தலைகள் ஒப்பின. பாரதிதாசனின், ’அழகின் சிரிப்பு’ உலகப் பொது இலக்கியமாக விளங்கும் புதுமைச் சிறப்பினது. பாரதிதாசனின் அரிய பல படைப்புகள் உலகமொழிகளில் உலாவரும் நாளைக் காண விரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/91&oldid=481242" இலிருந்து மீள்விக்கப்பட்டது