பக்கம்:உலகத்தமிழ்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

உலகத் தமிழ்


இவற்றை அறிஞர் சிந்தனைக்குப் படைத்தேன். கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்க வேண்டினேன். கல்விச் சீர்திருத்தத்திற்குத்தோள் கொடுக்க வேண்டினேன். என் கட்டுரை ஆங்கிலத்கில் இருந்தது. அதைப் படித்து முடித்ததும் தொடர்ந்து தமிழில் அதே தலைப்பில் பேசி னேன். அப்போது பாரதி பாடல்கள் சிலவற்றை ஒப்பு விக்க நல்வாய்ப்புக் கிடைத்தது.

கல்வி எல்லோருக்கும் ஆம், பெண்களுக்கும், சரிநிகர் வாய்ப்புக் கொடுக்கக் கட்டளையிடுகிறார். ‘எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று பாடுவதை இப்போது நினைவிற்குக் கொண்டு வாருங்கள்!

கல்வி முறையில்இருந்த குறையை நன்றாய் உணர்ந் தார் பாரதியார். மெய்யாய் உணர்ந்தார் பாரதியார். தம் இயலபுக்கேற்பப் பச்சையாகக் காட்டுகிறார். ஆயினும், மண்படு கல்வி என்று சொல்லி ஏழை மாணவனை ஏமாற்றித் திசை திருப்ப முயலவில்லை.

மனித உரிமையிலும் கல்வி உரிமையிலும் அவருக்கு அளவுகடந்த பற்றுதல். உள்ளத்தைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற தெளிவும் இருந்தது. அவருக்குத் தொலைநோக்கு. அலை ஒய்ந்து தலை மூழ்க முடியாது, கல்வி மாற்றத்திற்காக கல்வி பெறுதலைத் தள்ளிப் போடுவது தவறு என்பது தெரிந்தது.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல், ஆலயம் பதினாயிரம் காட்டல் இவற்றைவிட, ‘ஒரேழைக்கு எழுத்தறிவித்தல், சிறந்த புண்ணியம்’ என்பது பாரதியார் கருத்து. அதைப் பாரிசில் விரித்தேன். இங்கும் விரிக்கிறேன். கொள்வாருண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/97&oldid=481248" இலிருந்து மீள்விக்கப்பட்டது