பக்கம்:உலகத்தமிழ்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17. நம் பொறுப்பு

ம்மாநாட்டில், டாக்டர் ஜீன் பிலியோசா ‘சமஸ்கிருதமும் தமிழும்’ என்பது பற்றிய கட்டுரையைப் படித்தார். ‘இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டும் இந்திய மொழிகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டு வளர்ந்தன. ஐரோப்பாவில் இலத்தின் மொழி கொண்டிருந்த இடத்தை சமஸ்கிருதமும் இந்தியாவில் கொண்டிருந்தது. தமிழ், தமிழநாட்டிலும் பிறநாடுகளிலும் தமிழர் மொழியாகப் பயன்பட்டு வந்திருக்கிறது’ என்று புலியோசா கருதுகிறார்.

இலங்கை நீதிபதி தம்பையா, ‘ஆரிய சட்டங்கள்’ பற்றிப் பேசினார். ஆங்கில நாட்டில் எழுதாச் சட்டம் உருவானது போல், இலங்கையில் ‘தேசவளமை’ -அதாவது நாட்டு மரபு, சட்டமாக உருவெடுத்தது என்று விளக்கினர்.

‘தமிழ்ச் சமுதாயமும் வாணிகமும்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசரத்தினம் கட்டுரை இருந்தது. பண்டை நாள் தொட்டுத் தமிழர் வாணிகத்துறையில் சிறந்து விளங்கியதை விளக்கினார். அவர் வாணிகத்தின் பொருட்டுப் பிற நாடுகளுக்குச் சென்ற தமிழர் தங்கள் நாகரிகத்தைப் பரப்பியதை எடுத்துரைத்தார்.

‘தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முருக வழிபாடு’ பற்றி மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த திரு. ஹின்ஸ் பெகர்ட் பேசினார்.

மேலும் பலர் பேசினர். எல்லோருடைய பேச்சுக்களையும் சுருக்கிக் கூறவும் இடமிராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/98&oldid=481249" இலிருந்து மீள்விக்கப்பட்டது