அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 9 1934, ஜன.26. சத்தியாக்கிரஹ ஆசிரமம் கலைக்கப் பட்டது. 1934, செப். 17. அக்டோபர் முதல் தேதியிலிருந்து அரசியலிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்தார். 1934, டிச. 14. அகில இந்திய கிராமக் கைத்தொழில் சங்கம் ஆரம்பம். 1936, ஏப்.30.வார்தா அருகிலுள்ள சேவா கிராமம் தலைமைக் காரியாலயமாயிற்று. 1937, அக். 22, வார்தா கல்வித் திட்டம். 1939, மார்ச்,3. ராஜகோட்டை சீர்திருத்தம் சம்பந்த மாக உண்ணாவிரதம் ஆரம்பம் ; வைசிராய் தலை யீட்டால் மார்ச் 7-ந் தேதி உண்ணாவிரதம் நின்றது. 1940, செப். யுத்த நிலைமை சம்பந்தமாக வைசிராயைச் சந்தித்தார். 1940, அக். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரஹத்துக்கு அனுமதி. 1941, டிச. 30. காங்கிரஸ் தலைமைப்பதவியிலிருந்து விலகினார். 1942, ஜன.18.1940 அக்டோபரில் நிறுத்தப்பட்ட 'ஹரிஜன்' பத்திரிகையை மீண்டும் தொடங் கினார். 1942, மார்ச், 27. புது டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப் ஸுடன் சந்திப்பு.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை