பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உலகப் பெரியார் காந்தி ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திலும், அவர் இந்தத் தவறான போக்கை விளக்கி, அன்பும் விவேகமும் மலரவேண்டும் என்று அறிவுரை கூறியபடியே இருந் தார். அதே முறையிலே தமது அரிஜன் பத்திரிகையிலும் எழுதிக்கொண்டிருந்தார். தமது நோக்கத்தின் தூய் மையை விளக்கிவந்தார். வெறியர்கள் திருப்தி கொள்ளவில்லை. வெளிப் படையாகவே இது தெரியலாயிற்று. சின்னாட்களுக்கு முன்பு, அவர், நாட்டு மக்களின் அகத் தூய்மையைக் கோரி, உண்ணா விருதமிருந்தார். ஆபத்தான நிலை; அந்தச் சமயத்திலே, அவர் தங்கி யிருந்த பிர்லா மாளிகை முன் ஒரு சிறு வெறிக்கும்பல் கூடி 'அவர் சாகட்டும்' என்று கூவிற்று. அதுசமயம் அங்கு வந்திருந்த பண்டித நேரு, பதறிப்போனார்; அந்தக் கும்பலைக் கண்டித்துத் துரத்தினார். பிறகோர் நாள், பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் வேறோர் பித்தன், வெடிகுண்டு வீசினான். அதற்குப் பிறகோர் நாள், பண்டித நேருவின் கூட்டத்தில், வெடிகுண்டும் கையுமாக மற்றொவன் பிடிபட்டான். அவன் ஒரு சீக்கியன் என்று செய்தி கிடைத்தது.