உத்தமரை இழந்தோம் 35 இந்து மதத்தில் ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம், தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும், புதிய தத்வார்த்தத் தாலும், நீக்கும் காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த அரும் பணியால், அன்பு மார்க்கம் தழைக்கும், அனைவரும் ஆண்டவனின் குமாரர்களே என்ற உண்மை துலங்கும் என்று மனமார நம்பினார். -- அந்தோ! இந்த அகத் தூய்மையோ புறத் தூய்மையோ, நெடுங்காலமாகக் குவிந்து வளர்ந்து போயுள்ள மத வெறியர்களைத் திருத்தாதே, என்று கூறிவந்தோம் அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த் தாரோ, அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறிபிடித்த இந்து கிளம்பினான். இவன் இந்து மார்க்கத்தையும், இந்து அரசையும் நிலைநாட்டும் நோக்கம் கொண்டவன் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் சமஸ்தான சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டவனாம். பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. உலகை நோக்கி நமது உள்ளத்தை நோக்கி, "உத்தமரை வீழ்த்திவிட்டான் ஓர் உலுத்தன். நாங்கள் இழந்துவிட்டோம்- அவ ருடைய உடலை ருடைய உத்தமக் கொள்கைகளின் மூலம், அவர் இனி என்றென்றும் வாழ்வார். இந்தத் துக்க நாளன்று, அவர் எங்கள் ஒவ்வொருவருடனும் கலந்துவிட்டார்-- இனி அவரை எங்களைவிட்டுப் பிரிக்க முடியாது. யமுனைக் கரையிலே; அவருடைய சடலத்தைக்கொளுத் தினோம். ஆனால், வீடு திரும்புமுன், எங்கள் உள்ளங் அவ
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை