பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்காண விரும்பிய 'நாடு:' 'பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவ மும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேர்," இதுவே, உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம், என்று அறிவிக்கிறார் பண்டித நேரு. ஏ ஒரு நாடு, அன்னியரிடம் அடிமைப்பட்டு, விடு தலைப் போர் தொடுத்து, பிறகு தன்னாட்சி பெறுவது, மகத்தானதோர் சம்பவம் - உலக வரலாற்றில், ஒவ்வொரு சமயம், படைபலத்தாலோ, இராஜதந்திர பலத்தாலோ, ஏதேனும் ஒரு நாடு பிறநாடுகளை அடிமை கொள்வதும், அடிமைப்பட்ட நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதும், உலக வரலாற்றிலே, எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு விஷயமல்ல - அந்த வரலாற்றிலே, மிக முக்கியமான பகுதியே, சம்பவத்தைக் கொண்டது தான். இந்தச்