பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உலகப் பெரியார் காந்தி உண்டா அலெக்சாண்டர், ஜூலியஸ்சீசர் போன்ற ஆதி மகா வீரர்கள் கால முதற்கொண்டு, பெர்லின் சர்வாதி காரி ஹிட்லர் காலம் வரையிலே, இந்த நாடு பிடிக்கும் போக்கு, இருந்த வண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே, போர்த்திறனோடு வீர உணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டப்பட்ட மக்கள் யினர், அந்தந்த நாடுகளில், அவர்களைப் பலி கொடுத்து அந்த மாவீரர்கள், மண்டலம் பல வென்று கடைசியில் மாநில முழுவதையுமே தமது ஏகபோக ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டு மென்ற பேராசை கொண்டு, நின்றனர். அதே போது, போதுமான பலமும், தக்க தலைவரும் இல்லாமல், உள்நாட்டுக் குழப்பமும் பேத நிலையும் கொண்டு இருந்த நாடுகள், புயலில் சிக்கிய நெடு மரங்களெனச் சாய்ந்தன. சரிந்த அரசுகளின்மீது வெற்றி பெற்றவர்கள், சர்வாதிகாரம் செலுத்தினர். அடிமைப்பட்ட நாடுகளிலே, மக்களின் அழுகுரல் கிளம்பி, பிறகு, விம்முவதாகி அது குறைந்து பிறகு ஏக்கமாகி, பிறகு, அதை வெளியே காட்டுவதும் குற்றம் என்று கோல் கொண்டோன் மிரட்ட, அதனையும் நீக்கி விட்டு, உணர்ச்சியற்றுப்போன நிலையும் பிறந்ததுண்டு. ஆனால் இந்த இருள், நிலைத்திருப்பதில்லை - ஒளி கிடைக்க, தாமதம் ஏற்படினும், இடையே சொல் லொணாச் சங்கடம் விளையினும், விடுதலைச் சுடரொளி, எப்படியும் கிளம்பித் தன் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்திருக்கிறது. அவ்வப்போது, ராணுவ பலத் தால் அமைக்கப்பட்ட பல்வேறு சாம்ராஜ்யங்கள், சில பல காலத்துக்குப் பிறகு, சிதறி, பழையபடி, தனி அரசு கொண்ட பல நாடுகளாகி விட்டன. விடுதலைப்