பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 என்ற ஆறுதல் உலகப் பெரியார் காந்தி தோன்றும் - ஆயாசமும் ஏற்படக் கூடும். அதுபோலவே பல்வேறு நாடுகளிலே, விடுதலைப் போர் நடந்த காலங்களி லெல்லாம், எப்படியாவது, நம்மை அடிமைப் படுத்திய அன்னிய ஆட்சியை ஒழித்து நாட்டிலே தன்னாட்சியை ஏற்படுத்தவேண்டும். என்ற ஒரே எண்ணம். ஒரே இலட்சியமே தலைசிறந்து விளங்கிற்று. அந்த ஒரே குறிக்கோளுடனேயே, மக்கள் வீரமாகப் பணியாற்றினர் - அவர்களை நடத்திச் சென்ற தலைவர்களும் பல நாடுகளிலே விடுதலை வேட் கையை மட்டுமே, முக்கியமான தாக்கினர். பல நாடு களிலே, விடுதலை கிட்டியதும், மக்கள், தமது நோக்கம் ஈடேறிவிட்டது. அன்னியன் விரட்டப்பட்டான், தாய் நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது, சுதந்திரக்கொடி கெப் பீர மாகப் பறக்கிறது. ஆகவே, நமது வேலை முடிந்தது, இனிச் சொந்த வேலையைப் பார்ப்போம் என்று எண்ணி அங்ஙனமே, பழையபடி பிரஜைகள் ஆசி விடுவதே முறை எனக் கொண்டனர் - புலியைக் கொன்றான் பிறகு தோட்டக்காரன், தன் வேலை முடிந்தது என்று எண்ணிவிடுவது போலவே. புலி புகுந்ததால் ஏற்பட்ட சேதம், புலியைக் கொல்லப் போரிட்டதால் உண்டான சேதம், ஆகியவைகளைப் போக்குவது, வேறு ஏதேனும் துஷ்ட மிருகங்கள் புகாதபடி பாதுகாவல் அமைப்பது போன்ற காரியங் களைக்கூட தோட்டக்காரன் வெற்றி பெற்ற மகிழ்ச்சி யால், கொஞ்சகாலம் பொறுத்துத்தான் செய்ய முற்படுவான். அதுபோலவே, அடிமைப்பட்டிருந்த போது ஏற்பட்ட அவதிகளையும் அல்லல்களையும் துடைத்திடும் அரும்பணியை, விடுதலைப் போரில்