பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உலகப் பெரியார் காந்தி கம், பயம், சஞ்சலம், நம்பிக்கைக் குறைவு, பழக்க வழக்கம் ஏற்படுத்தியதால் உண்டான பற்று பாசம், ஆகிய பல்வேறு எதிரிகள் கிளம்பக்கூடும் - இவைகளை எல்லாம் முறியடிக்கவேண்டும். உலகம், இதை நாம் செய்யமுடியுமா; நமக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்று பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறது. நாம் அவருடைய காலத்தவர், அவருடை கருத்துக்களை அறிந்தவர்கள், என்பதற்கு, நாம் உதிர்த்த கண்ணீர் மட்டும் உலகுக்கு அத்தாட்சியாகிவிடாது. அவர் எத்தகைய இந்தியாவைக் காண விரும்பினாரோ, அதை உகுவாக்கும் அரும்பணியை நாங்கள் ஏற்று நடத்து கிறோம் பாரீர் என்று கூறி, வெற்றிகரமாக நடத்துவது தான், தகுதியான அத்தாட்சியாகும். விரும்பிய இந்தியாவை, கொண்டுவருவோம். மீண்டும் காண அவர் கவனத்திற்குக் ஏழை ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு. மக்களில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற நிலை இல்லாத நாடு. எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு. இந்த நாடு - காந்தி நாடு- காண்பதுதான், நமது தலைமுறைக்கு உள்ள வேலை. இதைச் சாதிக்க, அனைவரும் ஒன்றுபட, நமது தலைவர்களெல்லாம் கூடிப்பேசி, அனைவரின் ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி, இந்த அரும் பணியை வெற்றிகரமாக முடிக்கவேண்டும். நாடெங் கும், நகரெங்கும், இலட்சக் கணக்கிலே கூடினர் மக்கள் - அவர்கள். மறைந்த உத்தமருக்குத் தமது