பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 1908,ஜன. உலகப் பெரியார் காந்தி 10. டிரான்ஸ்வாலிலிருந்து வெளியேற மறுத்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். 1908. ஜன.30. ஒரு சமரஸம் ஏற்பட்டதால் விடுதலை பெற்றார். 1908, பிப். 8. ஒரு பட்டாணியன் அவரைக் கொல்ல முயற்சித்தான். 1908, ஆக, மீண்டும் சாத்வீகப் போராட்டம். 1908, அக். மீண்டும் சிறைவாசம். 1909, ஜூன், பிரிட்டிஷ் சர்க்காரிடம் தூது போக இங்கிலாந்து பிரயாணம். 1911-12, ஒரு வாரம் உண்ணாவிரதம், 4 மாதத்துக்கு தினசரி ஒரு வேளை சாப்பாடு ; பின்னர் 14 நாள் உண்ணாவிரதம். 1912. ஐரோப்பிய ஆடைகளைத் துறந்தார். பழவர்க் கங்களை மட்டும் உண்ண ஆரம்பித்தார். 1913, 3 பவுன் தலைவரி விதித்ததை எதிர்த்து சத்தியாக் கிரஹம் ஆரம்பித்தார். கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையடைந்தார். 1913, நவ.9.மீண்டும் கைது செய்யப்பட்டு 9 மாத சிறை தண்டனை யடைந்தார். 1913, டிச.18 நிபந்தனையின்றி விடுதலையடைந்தார்.