பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி அவர் சிந்திய இரத்தம் குருமார்களின் தங்கப் காணிக்கை செலுத்தினர். திரு அருளால் 49 பல்லக்குக்கு அவர்கள் திவ்விய புருஷர்களானார்கள். ஆகவே அத்தகையவர் களின் "தெரிசனமே" பாபத்தைப் போக்கும் என்று மக்கள் எண்ணினர் — அந்த மதகுருமார்கள் - மனம் வைத்தால், எதுவும் நடைபெறும் என்று மனமார நம்பினர். மாயவித்தை தெரிந்தவர்களால், துஷ்ட தேவதை களைக் கட்டுப்படுத்த முடியும், அவர்கள் கூப்பிட்ட உடனே குட்டிச்சாத்தான் ஓடிவருவான், நெருப்பு தண்ணீராகும், நீர் நெருப்பாகும். ஆளை மிருகமாக்கு வான், மிருகத்தை ஆளாக்குவான் என்றெல்லாம் நம்பினர் - அவர்களிடம் பயப்பட்டனர்--அவர்களின் மிரட்டலைக் கண்டு அடிபணியவும் சம்மதித்தனர். யோகிகளால் புவனத்தை அடக்க முடியும், தேவ இரகசியத்தை அறிய முடியும், அவர்களிடம் அபார மான ஆற்றல் உண்டு, அவர்கள் நினைத்தால் அதுபோ லவே நடைபெறும் என்று எண்ணினர். யோசிகளையும் பொதுவாகவே சாது சன்யாசிகளையும், மக்களை ஈடே ற் றும் மகத்தான சக்தி வாய்ந்தவர்கள் என்றே கருதித் தொழலாயினர்; அவர்களின் அருளைப்பெற ஆவல் கொண்டனர். ஆங்கில அ அப்படிப்பட்டவர்களெல்லாம், ஆட்சி இங்கே ஏற்பட்டதைத் தடுக்கவில்லை ஏற்பட்டபிறகு தத்தமது ஆற்றலை உபயோகித்து, அதை எதிர்த்து ஒழிக்கவில்லை ஏன் அதைச் செய்யவில்லை என்று மக்கள் கேட்டதுமில்லை.