பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 1 மோசமான நிலைமை ஏற்படப்போகிறது என்றிருந்தால், அப்போது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதன் மூலம் அந் நிலைமை ஏற்படாதபடி தடுக்கமுடியும். இது நாக் அனுபவ பூர்வமாகக் காணும் உண்மை. உலக மக்களின் செய்கைகள் நாசகாரச் செய்கைகளாக இருந்திருந்தால் உலகல் முன்னமே அழிந்திருக்கும் என்பதை நாம் உணர முடியாதா? அன்பு. அல்லது வேறுவிதம்சொல்ல வேண்டுமானால், அஹிம்சையால்தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது. உலகுக்கு நல்லவனாக இருக்க நாள் கடவுளுக்குத் துரோகம் செய்யமாட்டேன்.

நூற்றுக்கணக்கானவர்கள் நான் சாகவேண்டுமென்று விரும்பினாலும் சத்தியும் நிலைக்கட்டும். எனது நம்பிக்கையின் முதல்படி அஹிம்சை; கடைசிப் படியும் அஹிம்சையே. நான் நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கை என் துள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து கெண்டிருக்கும். என்றும் எனது நம்பிக்கையைக் கொல்லமுடியாது. முதல் ஆத்மீக மனப்பான்மைக்குப் பீதியின்மையே தேவையாகும். கோழைகளிடம் தார்மீக மனப்பான்மையைக் காண முடியாது. எங்கு பீதி நிலவுகிறதோ அங்கு மதம் இல்லை: சடவுளும் இல்லை.