பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன், தென் ஆப்பிரிக்காவிலே, முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடந்த காலத்திலும், நாட்டுத் தலைவ ராகி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின் போதும், சிறைச்சாலையிலேயும், நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மயை உண்டாக்க வேண்டு மென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும், அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்த போதும், வெறியன் வெடிகுண்டு வீசியபோதும், ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துக்களிலிருந்தும் அவர் தம்பினார். ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேரா பத்து வந்துவிடுமோ என்று நாடு கலங்கிற்று. எதிர்பாராத ஆபத்து. எவரும் கனவும் கண்டிராத விதத் தில், ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது. கயவனின் கைத்துப்பாக்கியினால். இந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுத்துவதற்காகவும், அந்த மார்க்கத்தை சூதுக் கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன்படுத்திக் கொள்ளும் கொடுமையை நீக்குவதற்காகவும் பாடுபட்டவர் களை, அந்த மதத்தைக் கெடுக்கிறவர்கள் என்று தவறாக எண் ணிக்கொண்டு, கேவல புத்தி படைத்தவர்கள், கருத்து