பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உலகப் பெரியார் காந்தி சின்னாட்களுக்கு முன்பு அவர், நாட்டு மக்களின் அத் தூய்மையைக் கோரி, உண்ணாவிரமிருந்தார். ஆபத்தான நிலை; அந்தச் சமயத்திலே. அவர் தங்கியிருந்த பிர்லா மாளிகை முன் ஒரு சிறு வெறிக் கும்பல்கூடி 'அவர் சாகட்டும் என்று கூவிற்று. அதுசமயம் அங்கு வந்திருந்த பண்டித நேரு பதறிப்போனார்; அந்தக் கும்பலைக் கண்டித்துத் துரத்தினார். பிறகோர் நாள், பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டி ருக்கையில் வேறோர் பித்தன், வெடிகுண்டு வீசினான். அதற்குப் பிறகோ நாள், பண்டிதநேருவின் கூட்டத்தில், வெடிகுண்டும் கையுமாக மற்றொருவன் பிடிபட்டான். அவன் ஒரு சீக்கியன் என்று செய்தி கிகூடத்தது. இவைகளுக்கெல்லாம் முன்னே, அன்பர் ராஜகோபாலாச் சாரியாரின் மோட்டார்மீது எவனோ ஒருவன் சுட்டிருக்கிறான். இந்தக் கோரக் கொலை நடைபெறுவதற்குச் சில நாட் களுக்கு முன்பு, பீர்லா மாளிகையிலே அவர் தங்கியிருந்த அறையின் பக்கம், எவனோ ஒருவன் நுழைந்து, யார். என்ன என்று கேட்டபோது, பேந்தப்பேந்த விழித்தான் என்று சேதி வந்தது இப்படிப் பலவிதமான முயற்சிகளைச் செய்து வந்தனர் பாதகர்கள். கண்ணீரைத் துடைத்துக் கடமையைச் செய்வோம். கடைசியில்,பிரார்த்தனைக் கூட்டத்தில், அவருக்கு எதிரே நின்று. திரளான மக்கள் கூடியிருந்த மன்றத்தில், கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான் காதகன். இத்தகைய படுகொலைகள் மூலம், ஆதிக்கத்தைப் புகுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வேலைசெய்யும் ஒரு