பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம். - யமுனை நதி இந்திய துணைக்கண்டத்து மக்கள் மட்டு மல்ல, உலகிலேயே பல இடங்களிலும் உள்ள மனிதாபி மாளமும் நல்லறிவும் விடுதலை வேட்கையும் கொண்ட மக்கள் அனைவருமே, சிந்திய கண்ணீரையே, கொண்டு செல்கிறது. அவ்வளவு கண்ணீரும் சேர்ந்து கடல் நீரில் கலக்கிறது. உலகைத் திருத்தவேண்டுமென்று உழைத்த உத்தமர்கள் எத்தகைய தியாகக் கடலிலே வீழ்த்தப்பட்டனரோ, அதே நிலைக்கு, மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியாரின் வாழ்க் கையும், உத்தமர் அனைவரும் சென்ற வழியே சென்று தீர வேண்டி நேரிட்டுவிட்டது.. யமுனை நதிக்கரையிலே, 31-1-48 மாலை 5-மணிக்கு மூட்டப்பட்ட தீ, அங்கு காந்தியாரின் சடலத்திற்கு மட்டு மல்ல, உலகிலே இலட்சக்கணக்கான மக்களின் அடி வயிற்றிலே கூட அல்ல. இருதயத்தையே தீண்டிய தீ ஆகும். உலக வரலாற்றிலே, இதுபோன்ற துக்ககரமான, துடிதுடிக்கச் செய்யும், திடுக்கிட்டுத் திகைக்கச் செய்யும் நிகழ்ச்சி, வேறு இல்லை. இந்திய பூமி மட்டுமல்ல, இருதயம் படைத்த நல்லறி வாளர்கள் எங்கெங்கு இருக்கிறார்களே, அங்கெல்லாம், இந்தத்துக்கம் மக்களை, இதுவரை அவர்கள் அனுபவித் தறியாத விதமாக ஆக்கிவிட்டிருக்கும். எங்கு நோக்கினாலும் ஒரே திகைப்பு! சுலங்கிய

கண்கள்! ஏக்கம்!