பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 19 ஒவ்வோருவருக்கும் அவரவர் குடும்பத்திலே, அவர் களின் இருதயத்தில் முதலிடம் - முக்கிய இடம் பெற்ற எவரேனும் இறந்துபோய், அந்தத் துக்கத்தின் தாக்குதலால் அவதிப்பட்ட அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்ற போதிலும் எதுவும், இந்தச் சமயத்திலே ஆறுதல் அளிக்கும் ஆற்றலைப் பெற்றதாகக் காணோம். இந்தத் துக்கம்,ஏதோ ஓர் புதுவிதமானதாக இதுவரை அனுபவவித்த எந்தத் துக்கத்தையும்விட, அதிகமானதாக இருக்கிறது. மரணம் எவ்வளவு தொண்டு கிழவருக்கு ஏற் படினுங்கூட, துக்கம் தரத்தான் செய்யும். ஆனால் இது மரணமா! அல்லவே! அவர் சாகவில்லை. மாபாவியினாலே கொல்லப்பட்டார். மாலை நேரத்தில், ஒரு நாட்டு மக்களையே உலகறிய வைத்த உத்தமர் தம் பேத்திமார் இருபக்கமும் வர, தம் சொல்லை எதிர்நோக்கிக் கூடியிருக்கும், ஆர்வமிக்க மக்கள் முன்வந்து கொண்டிருக்கிறார் - இதோ இன்னோர் நிமிஷம் - அவர் மேடைமீது அமர்ந்து, ஒற்றுமையைப்பற்றி ஒருவருக் கொருவர் குரோதம், துவேஷம் நீங்கி, நாட்டு நன்மதிப்பை நாசமாக்காத வகையில் நடந்து கொள்ளவேண்டுமென்று அள்புரை அளிக்கப்போகிறார். எத்தனையோ நாட்களாக அளித்தது போலவே - அந்த ஒரு நிமிஷம் எவ்வளவு பெரிய மாறுதலை உண்டாக்கிவிட்டது - நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் நிலைமையை ஏற்படுத்திவிட்டது: அந்த நிமிஷத்தில், அவர் மேடைமீதேறப் படிக்கட்டுகளில் கால் வைக்கும் நேரத்தில் எவனோ ஒரு கயவன், மனித உருவில் உலவிய மிகுகம், மாநிலத்தோர் எவரும் காரி உமிழத்தக்க மாபெருந் துரோகம் புரிய மனதைத் துவேஷக் கூடாக்கிக் கொண்ட மாபாவி, ஒன்று, இரண்டு, மூன்று என்று துப்பாக்கி யால் சுட்டான் மார்பிலே, அடி வயிற்றிலே - கண்கள் மூடிக் கொண்டன - அவர் சாய்ந்தார் நாடு முழுவதும் சோகக் கடலிலே வீழ்ந்து விட்டது - உள்ளே கொண்டு சென்றனர் உடனிருந்தோர் கதறினர் உயிர் அவருக்குப் பிரிந்தது -