பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உலகப் பெரியார் காந்தி அந்த நிமிஷமே கொளரவமே நாட்டைவிட்டுப் பிரிந்து விட்டது. எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம், எத்துணைப் பெரிய துரோகம் என்பதை எண்ணிப்பார்க்காமலே அந்த வெறியன் செய்த காரியம், ஏசுவைச் சிறுவையில் அறைந்த ரோம் வெறி யர்களும் வெட்கித் தலை குனியும்படியானதாகும். ரோம் ஆதிக்க வெறியர்களாவது, ஏசுவின் செல்வாக்கு பரவுவதால் தங்கள் ஆதிக்கம் கெடுகிறது என்று பொறாமையும் துவேஷ மும் கொண்டதால், அக்கொடுஞ் செயல் புரிந்தனர். இந்த வெறியனோ, எந்த மாபெரும் தலைவரால் இவன் மதிப்புப் பெற்றானோ, இவனுடைய வாழ்வுக்கு ஓ புது அந்தஸ்து கிடைத்ததோ. நாட்டுக்கு ஓர் புது நிலை ஏற்பட்டதோ, அந்த மாபெருந் தலைவரையல்லவா, மார்பிலே சுட்டுக் கொன்றான்! பெற்ற தாயைக் கொல்லும் பேயன், அந்த மாலை நேரத்திலே மக்களுக்கு மதிமொழி கூற வந்தபோது, மஞ்சள்நிற வெயிலில் அவருடைய முதுமை தெரிந்தபோது, ஒரு பெரிய துணைக் கண்டத்தில் சர்க்காரே அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் காத்திருந்தும், ஒரு பாதுகாப்பையும் விரும்பாமல், தனியாக வந்த தூய்மையைக் கண்டபோது சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசினான் வேறோர் வெறியன் என்பதறிந்தும், மீண்டும் எவனாவது இதுபோல் செய்தால் என்ன செய்வது என்பது பற்றிய எண்ணமே கொள்ளாமல் வந்த போக்கைக் கண்டபோது, மரணத்தின் பிடியிலே தன்னைந்தாளே சிக்க வைத்துக்கொள்ளும் விதமாகப் பட்டினியிருந்து, அதன் மூலம் நாட்டு மக்களிலே சில பலருக்கு ஏறியுள்ள வெறி விஷ யத்தைப் போக்க முயற்சித்தாரே சில நாட்களுக்கு முன்பு என்ற சம்பவத்தையும் எண்ணிப் பாராமல், கடந்த முப்ப தாண்டுகளுக்கு மேலாகத் தம் சொந்த வாழ்க்கை என்பதையே மறந்து,நாட்டுக்குப் புது வாழ்வு பெற்றுத் தரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வந்தவராயிற்றே என்பதை யும் எண்ணிப்பாராமல், சுட்டான்- மும்முறை - அவர் கீழே சாயும்வரை,