பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் 20 முப்பதாண்டுகளாக எந்த ஏகாதிபத்தியத்தின்மீது அவர் தாக்குதலை நடத்தினாரோ, அந்த ஏகாதிபத்தியம் செய்யத் துணியாத காரியத்தை, எவனை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவித்தாரோ அவன் செய்திருக்கிறான் தீயிலே வீழ்ந்த நாகத்தை வெளியே எடுத்துப்போட்டால், பாம்பு அவனையே தீண்டும் என்பார்கள். இந்தப் பாவியின் செயல் அதைவிடக் கொடுமை நிரம்பியது. ஆண்டு ஒன்றும் பூரத்தியாகவில்லை. நாட்டுக்கு உலகிலே புது நிலை ஏற்பட்டு - இதற்குள், அவர் இயற்கையாக மரணமடைந்திருந்தால்கூட, துக்கம் ஏற்படத் தான் செய்யும். ஆனால் இப்போதோ, அவர் சரகவில்லையே! கொல்லப்பட்டார் ஒரு கொடியவனால்! அவன் வாலிபன இந்துவாம்! இந்தியா என்றோர் நாடுண்டு. அங்கு ஏலம், கிராம்பு பெறுவதுண்டு. பொன்னும் பொருளும் மிக உண்டு, போக் கறியாதார் நிரம்ப உண்டு என்ற அளவில் பதினாறாம் நூற்றாண்டிலேயே உலகம் அறிந்திருந்தது. பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே சிக்கிவிட்டது. அப்போது 'இந்தியா என்றோர் நாடுண்டு. அது ஆங்கிலேயருக்கு நல்ல வேட்டைக்காடு' என்று உலகம், இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டது. திலகர் காலத்திலே விடிவெள்ளி தோன்றியது போல, விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்றபோதிலும், காந்தியார் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, "இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் உண்டு என்று உலகம் அறிந்துகொள்ள முடிந்தது, காந்தியாரின் புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக்கண்டு வந்தது. தன்னலமற்ற விளைவுபற்றிய கவலையற்ற, போராட்ட மனோ பாவத்தை நாட்டிலே காந்தியாரால்தான் உண்டாக்க முடிந்தது, அதற்கு முன்புவரையில். விடுதலை கோரி மனுச் செய்யும் மேதாவிகளிடமே நாடு இருந்தது. அவருடைய உருவமோ, உடலமைப்போ, பேச்சோ, நடவடிக்கையோ, ராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடியவிதமாக இல்லை ஆனால் அவரால், ராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களுக்கு உண்டாக்க