பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உலகப் பெரியார் காந்தி அகை முடிந்தது. எத்தனை எத்தனைப் போராட்டங்கள்! களிலே கலந்துகொண்ட வாலிபர்கள் எத்தனை எத்தனை இலட்சம் ! எத்தகைய வீரச்செயல்கள், தியாகச்செயல்கள் அவர் காலத்திலே நேரிட்டன. இவ்வளவையும் தந்த தலைவருக்கு, அந்தத் துரோகி தந்தது, மூன்று குண்டுகள். காக்கை சுழுகு, நாய், நரியும் அந்த மாபாவியின் உடலைத் தின்னக் கூசும். அவ்வளவு பெரிய துரோகச் செயலை அந்த வாலிபன் செய்துவிட்டான். அந்த வெறியனின் செயலால் இருள் சூழ்ந்து கிடக்கும் நோம் இது எவரும் எதிர்பாராதது நடந்துவிட்டால், எவ்வளவு பேசிப் பேசிப் பார்த்தாலும். ஆற்றிக்கொள்ள முடியாதவிதமான நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தத் துக்கத்தை எளிதில் துடைத்திட முடியாது. நாட்டுக்கே பெரியதோர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரம் ஒரு இருள் கவிந்து கொண்டு இருதயம் பிடித்துக்கொண்டு, கண்களிலே நீர் கொப்பளித்துக் கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் ஆறுதல் பெறுவது மிக மிகச் சிரமான காரியம். ஆனால் என்ன செய்வது? ஒரு வெறியன் செய்துவிட்ட துரோகம், நாட்டையே நிலைகுலையச் செய்துவிட்டது; மனம் பதறுகிறது. மக்கள் மனம் பதறியுள்ள நிலையிலே, நாட்டுத் தலைவர்கள் தான், ஆறுதலைத் தரவேண்டும் - துக்கத்தை ஆளுக்கோர் அளவு பங்கிட்டுக் கொள்வதன் மூலமும், இந்தக் கரட்டு முறையை நாட்டிலே கண்டோமே என்பதுபற்றி எண்ணித் தலை இறங்குவதன் மூலமும் அவர் கீழே சாயும் வரையிலே அஞ்சாமல் பணிபுரிந்ததுபோல, வெறியர்கள் டில்லியில் உலவுகிறார்கள்; வெடிகுண்டும் வீசினார்கள்' என்பறிந் திருந்தும் மாபெருங் கூட்டத்திற்குப் பாதுகாப்புத் தேடாமல் வந்த மாண்புபோல, நாமும் இந்தத் தாங்கமுடியாத துக்கத் தையும் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். காந்தீயாரின் புகழொளியை அல்ல. அவருடைய உழைத்து அலுத்த உடலைத்தான், வெறியன் சுட்டு வீழ்த்தினான். எனவே, கண்ணீலாத் துடைத்துக்கொள்வோம்; வேதனையைக் கட்டுக்குக் கொண்டுவருவோம்; அவரவரும் தத்தம் வாழ்நாளில், மக்கள் பணிசெய்வதே, மறைந்த மன