பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் 25 உயிரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். எரிமலைமீது நடந்தார்; தீ அண்டவில்லை. ஆனால் சர்க்காரின் தலைமைப் பீடத்தைத் தன்னிடம் கொண்ட டில்லியில். அக்கிரமம் நடந்துவிட்டது. சாம்ராஜ்யங்களின் சவக்காடு, இந்த பாழாய்ப்போன டில்லி இது நமக்குத் தலைநகராக இருக்கவேண்டாம்" என்று கிருபாளனி போன்ற தலைவர்கள் சொன்னார்கள். உண்மையி லேயே டில்லியிலே முன்னம் அமைக்கப்பட்ட பெரிய பெரிய சரம்ராஜ்யங்கள் அவ்வளவும் சதிச்செயலால், படுகொலையால், பாவிகளின் துரோகத்தால், சரிந்து போயின. சவக்காடு- சாம்ராஜ்யங்களின் சவக்காடு ஆம் -- அதுமட்டுமல்ல - இப் போது, உலகைத் திருத்த உத்தமரையே சாகவைத்த துரோக புரியாகிவிட்டது. டில்லியிலே என்ன இருக்கிறது என்று உலகிலே. எதிர்காலத்திலே, கேள்வி கேட்கப்படும்போது, நாமும் பின் சந்ததியும், எப்படிப் பதில் கூறமுடியும் தலை கவிழ்ந்து. தழதழத்த குரலிலே, "மகாத்மாவை மாபாவி கொன்ற இடம் அந்த இடம் அந்த டில்லி என்று கூறிக் கதறவேண்டும். மகாத்மா கொலை செய்யப்படுவதற்கு ஓரு மணி நேரத் திற்கு முன்பு. அவருடன் சர்தார் பட்டேல் பேசிக்கொண்டி ருந்தார். அந்தப் பேச்சில், காலம் போய்விடுவதை அறிந்து, தன் அன்புரை கேட்க மக்கள் கூடி இருப்பரே என்ற எண் ஊம்கொண்டு, சர்தாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார் மீண்டும் சந்தீக்கும்போது படேல் கண்டது குண்டு பாய்ந்த மார்பும், அப்போதும் மலர்ச்சி குன்றாத முகமும் கொண்ட மகாத்மாவின் ஆவி பிரியும் கோலத்தை, துக்கந் துளைக்கும் நிலையிலே உள்ள நாம், அவர்களைச் சற்று நம் அகக்கண்முன் கொண்டுவந்து பார்க்கவேண்டும், சர்தார், நேரு, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார், சரோஜினி அம்மையார், தேவதாஸ் இவர்களின் உள்ளம் இந்தச் செய்தியைத் தாங்க முடியுமா?. எவ்வளவு தொடர்பு. எத்தகையத் தொடர்பு எத்தனை ஆண்டுகளாகத் தொடர்பு. கஷ்டத்திலும் சுகத்திலும்