பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உலகப் பெரியார் காந்தி கலந்திருந்த அவர்களின் உள்ளம். எப்படி இருந்திருக்கும். பிர்லா மாளிகையிலே, அவருடைய உடலம் இருந்த நிலையைக் கண்டபோது? அவர்கள், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொண்டுள்ளனர். நாட்டு மக்களின் துக்கத்தைத் துடைக்கும் கடமை உணர்ச்சியுடன் அவர்களின் பக்கம் நின்று, நாமும், இந்தச் சகிக்க முடியாத துக்கத்தைத் தாங்கிக்கொள்வோம். உலகிலே உள்ள எல்லா நகர்களிலும். மக்களின் மனம் துடிதுடித்துப் போயிற்று. தூர தேசமான அமெரிக்காவிலே அழுகுரல், பற்பல நாடுகளிலேயும் பிரலாபம். எவரும், ஆ - என்று அலறிய நிலை. எங்கும் ஏற்பட்டதில்லை இத்தகைய கோரச் சம்பவம். . கட்சிகளைக் கடந்த கர்மயோகி துக்கம் நம்மை பிணைக்குமாக. காலை 11 மணிக்கும் புறப்பட்ட பிரேத ஊர்வலம், யமுனைக் கரைப் போய்ச்சேர, மாலை ஐந்தாயிற்று. ஜனசமுத்திரத்தைக் கடந்து சென்றது கதறும் மக்களைக் கடந்து சென்றது ஐந்து மைல் இருக்குமாம், அந்தப் பாதை. அவ்வளவு இடமும் மக்கள் கூட்டம் ஆனால் அந்த ஐந்து மைல்களில் மட்டுமல்ல. இந்தியாவின் 2000 × 1000 மைல்கள் என்றுள்ள அளவு பூராவிலும் உள்ள நகரம், கிராமம் அவ்வளவு இடமும். மக்களின் சோகப் பயணமே நடந்தது யமுனையை நாமெல் ஸாம் காணவில்லை. ஆனால் பல கண்ணீராறுகளைக் கண்ணீர் ததும்பும் கண்களால் கண்டோம். அங்கே மாலை 6 மணிக்குத் தீயிட்டனர். இங்கோ, பாதகன் அவரைக் கொன்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், நமது இருதயத்திலே தீயிடப் பட்டது; ஆறாத அணையாத தீ ; ஆத்திரக்காரன் நமது.. நாட்டின் உயிருக்கு வைத்த தீ : நானிலமெங்கும் நம்மை அறியச் செய்த உத்தமரின் உடலிலே தீ வைத்த அந்த உலுத்தன், எவ்வளவு கொடிய துரோகம் செய்துவிட்டான் என்பதை எண்ணும்போதே, நமது இருதயத்தில் பட்ட தீ, மேலும் மூண்டுவிடுகிறது. நாம், மிக மிக, மகத்தான நஷ்டத்