பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் 3.0 அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் போன்ற ஆதி மகா வீரர்கள் கால முதற்கொண்டு, பொலின் சர்வாதிகாரி ஹிட்லர் காலம் வரையிலே, இந்த நாடு பிடிக்கும் போக்கு, இருந்த வண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே, போர்த்திறனோடு வீர உணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டப்பட்ட மக்கள் உண்டாயினர். அந்தந்த நாடுகளில் அவர்களைப் பலி கொடுத்து அந்த மாவீரர்கள். மண்டலம் பலவென்று கடைசி யில் மாநிலம் முழுவதையுமே தமது ஏகபோக ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற பேராசை கொண்டு, நின்றனர். அதேபோது, போதுமான பலமும், தக்க தலைவரும் இல்லா மல், உள்நாட்டுக் குழப்பமும் பேத நிலையும் கொண்டு இருந்த நாடுகள், புயலில் சிக்கிய நெடு மரங்களெனச் சாய்ந்தன. சரிந்த அரசுகளின் மீது, வெற்றி பெற்றவர்கள். சர்வாதிகாரம் செலுத்தினர். அடிமைப்பட்ட நாடுகளிலே, மக்களின் அழு குரல் கிளம்பி பிறகு, விம்ழவதாகி அது குறைந்து பிறகு ஏக்கமாகி, பிறகு, அதை வெளியே காட்டுவதும் குற்றம் என்று கோல்கொண்டோன் மிரட்ட, அதனையும் நீக்கிவிட்டு உணர்ச்சியற்றுப்போன நிலையும் பிறந்ததுண்டு. ஆனால் இந்த இருள். நிலைத்திருப்பதில்லை ம் ஒளி கிடைக்க, தாமகம் ஏற் படினும்; இடையே சொல்லொணாச் சங்கடம் விளையினும், விடுதலைச் சுடரொளி, எப்படியும் கிளம்பி தன் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்திருக்கிறது. அவ்வப்போது, ராணுவ பலத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு சாம்ராஜ்யங் கள், சில பல காலத்துக்குப் பிறகு, சிதறி, பழையபடி, தனி அரசு கொண்ட பல நாடுகளாகிவிட்டன. விடுதலைப் போர் முரசொலி, அடியோடு எங்கும் எப்போதும், அழிந்து படுவதில்லை. முரசு இருந்து, அதைக்கொட்டும் திறம் வராமல் இருந்ததுண்டு; முரசறையும் திற இருந்து, முரசு அமையாது இருந்ததுண்டு. ஆனால், அடிமைப்பட்ட எந்த நாடும், எப்பாடுபட்டேனும், எத்தனை முறை தோற்றேனும், விடுதலையைப் பெறாமல் போனதில்லை. ஏறத்தாழ, இயற்கையின் கட்டளை, இந்த விடுதலை வேட்கை, எனவேதான், எவ்வளவு பெரிய பலமுள்ள உடையோர் முடையோர் முள்