பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காண விரும்பிய நாடு 35 ஏழை ஈடேறவேண்டும். ஏழை உரிமை பெறவேண்டும், ஜாதிபேதம் ஒழியவேண்டும். ஒற்றுமை மவரவேண்டும். என்று கூறினதுடன். ' இத்தகைய இந்தியா உறுவாகவேன் டும். அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடு கிறேன்' என்றும் கூறினார். மற்ற நாடுகளின் நலிவு அன்னிய ஆட்சியின்போது, அதன் விளைவாகவே ஏற்பட்டதால், அந்த நாடுகளிலே தோன்றிய தலைவர்கள், நாட்டின் தலிவை நீக்க அன்னியரை விரட்டினாலே போதும் என்று கருதிணர் - அவர் கள் அங்ஙனம் கருதினத்தில் தவறுமில்லை, அதுபோல இங்கு அன்னியர் விரட்டப்பட்டு, நாடு, தன்னாட்சி பெறுவது மட்டுமே போதும் என்று கருதினால், நிச்சயமாகத் தவறு ஏனெனில் இங்கு, அன்னிய ஆட்சியினால் மட்டுமல்ல அதற்கு முன்பிருந்தே. நமக்கென்று தோன்றிய சில அரசர்களாலும் அவர்கள் அனுஷ்டித்த முறைகளாலும், நமது சமூக அமைப்பி னாலும் அதன் பயனாக ஏட்பட்ட பழக்க வழக்கங்களாலும் நமது வாழ்க்கை இலட்சியத்தினாலும் அதை ஒட்டி கட்டிவிடப் பட்ட வெட்டி வேதாந்த முறைகளினாலும், நமது மத அமைப் பினாலும் அதைப் பயன்படுத்திக்கொண்ட தந்நலக்காரரின் போக்கினாலும், மலப்பல கேடுகள் முளைத்துக் காடெனக் கிடந் தன். எனவே அள்ளிய ஆட்சி அகள்டூல் நாட்டின் நலிவு நீங்கிவிடும் என்ற அளவோடு அடிகள் நிற்கவில்லை-அள்ளிய ஆட்சியை நீக்குவதுடன், மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்குத் தடையாக உள்ள சகல கேடுகளையும் நீக்கியாகவேண்டும் என்று தெளிவாகக் கூறினார். அவர் காண விரும்பிய காட்சி இந்தியர் ஆளுகின்ற இந்தியா என்பது மட்டுமல்ல, நீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தில் மாசும் தூசும் போக்கப்பட்டு, ஜாதி பேதம் களைந்தெறியப்பட்டு, ஏழையின் வாழ்விலே புதியதோர்