பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உலகப் பெரியார் காந்தி கோர்ட்டுக்குச் சென்றிருந்ததைக் கண்ட நீதிபதி தலைப் பாகையை அகற்றும்படி உலரத்தார். காந்தியடிகள் அங்ஙளம் செய்ய மறுத்துக் கோர்ட்டை விட்டு வெளியேறினார். செய்கையைக் கண்டித்துப்பத்திரிகைகளுக்கு எழுதினார். இன்னொரு சமயம், பிரிடேரியா என்னும் இடத்துக்கு முதல் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்தார், நிறத்திமிர் கொண்ட ஒரு வெள்ளையுள், ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் உதவியைக்கொண்டு முதல் வகுப்பு வண்டியினின்றும் கீழே இறக்கிவிட்டான். இத்தகைய கொடுமைகளை, காந்தியடி களுக்கு வெள்ளையரின் நிறத்திமிரை ஒழித்துக்கட்ட உறுதி கொள்ளும்படிச் செய்தது, கடைசியில் வெள்ளையரின். ஆதிக்கமே இந்நாட்டில் ஒழிந்ததற்கு உத்தமரின் ஓயா உழைப்பே காரணமாயிற்று.