பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் சிந்திய இரத்தம் 'இவர் கரு தரிக்கும்போதே ஆணா பெண்ணா என்று அறிந்து கூறினவர்”, " 'இவர் காட்டேரியை ஏவி விட்டு விடுவதில் கைதேர்ந் தவர்" "இவர் மண் அள்ளிக்கொடுத்தால் பொன் ஆகும். "இவர் நமது கடைப்பக்கம் வந்துபோனால் போதும். இலட்சுமி தாண்டமாடுவாள் நம்மிடம்" என்ற இது போன்ற புகழுரைகள், நம்பிக்கையுரைகள் நடந்தவண்ணந் தாள் இருந்தன. நாட்டை அன்னியரிடம் இழந்திருக் கின்றோம். இவர்கள் இவ்வளவு அற்புத புருஷர்கள் என்றும் நம்புகிறோம். இந்த இரண்டும் எப்படிப் பொருந்தும் என்று எண்ணவுமில்லை. 'பழைய சக்திகளின்' பெருமை, ஆடாமல் அசையாமல் இருந்துகொண்டிருந்தது. . இவ்வளவு 'அற்புதவான்கள்', 'ஆற்றலுள்ளவர்கள்' மகாராஜாக்கள்' போன்றவர்கள், யாரும் மனதாலும் எ ணாத மகத்தான காரியத்தை, ஒருவர் சாதித்தார். உத்தமர் காந்தியாரின் ஒப்பற்ற சக்தியை உள்ளபடி உணருவதற்கு, இந்தச் சூழ்நிலையை நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனித சக்திக்கு மேற்பட்ட மகர சக்தி வாய்ந்தவர்கள் என்று மக்கள் பல காலமாக, தலைமுறை தலை முறையாக, பழக்கமாக, யாராரை, அதாவது மகாராஜாக் களை, மத அதிபர்களை, யோகிகளை, சித்து விளையாடுபவர்களை, மற்றும் இது போன்றவர்களைப் பாராட்டியும் வணங்கியும் காணிக்கை செலுத்தியும் வந்தார்களோ. அவர்கள் யாரும், நாட்டுக்கு விடுதலையும், மக்களுக்கு நற்குணமும் ஏற்பட வேண்டுமென்பதற்காக, உத்தமர் காந்தியார்போல் உழைத்து வெற்றிகண்டது போலக் கண்டதில்லை. அவர் பிறந்தபோது, வானத்திலே ஓர் ஒளி தோன்றிற்று--வாழ்த்துவதற்குத் தேவர்சுன் கூடினர் நீர்க்கதரிசி தோன்றுகிறர் என்று