பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உலகப் பெரியார் காந்தி இயற்கை முறை மாறித் தெரிவித்து-பட்டமரம் தளிர்த்தது- செத்தவன் பிழைத்திட்டான் வெட்டாமல் ஆறு தோன்றிற்று என்று எந்த அற்புத நிகழ்ச்சியும் ஏற்பட்டதாகக் கூறப்பட வில்லை. அவர், எல்லோரையும் போலவே பிறந்தார் போர்பந்தர் சமஸ்தானத்திலே அவர் பிறந்த அன்று, வேறு எவ்வளவோ குழந்தைகள் பிறந்தன. அவர் பிறந்த குலமும்,குடும்பமும், குவலயம் அறிந்தது என்றோ, அருள் பெற்றது என்றே. ஆலய அதிகாரம் படைத்தது என்றோ, அரசாள்வோரின் அந்தரங்க ஆதரவைப் பெற்றதென்றே கூறுவதற்கில்லை. ஏழைக்குடும்பம் அல்ல- ஆனால் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர் சாதாரணத் தொட் டிலில் தவழ்ந்து கொண்டிருந்தபோது, தங்கத்தாலான தொட் டிலிலே படுத்திருக்க, தாதிமார் தாலாட்டும் பாடிக்கொண் டிருக்கும் நிலையில் சீமான் வீட்டுச் செல்லக் குழந்தைகள் எவ்வளவோ இருந்தன இந்தியாவில் ஐநூற்றுக்கு மேற்பட்ட சமஸ்தானங்கள். ஆயிரக்கணக்கில் ஜெமீன்கள்,ஜாகீர்கள். காட்டு ராஜாக்கள், மேட்டுக்குடியினர், வணிக வேந்தர்கள். ஏராளமல்லவா- அவர்களின் வீடுகளிலெல்லாம், பிறந்த குழந்தைகள்போல, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிறக்கும் போதே. பிறரால் பெருமைப்படுத்தப்பட்டுத் தீரவேண்டிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவராசு இல்லை. கல்வித்துறையிலே அவர் பெற்ற வெற்றியும் கீர்த்தியும் கூட, வேறு எவ்வளவோ பேர் பெற்ற விதமானதுதான் - சில ருக்குத் கிடைத்ததைவிடக் குறைவும் கூட, பாரிஸ்டர் படிப்பில் தேறினார் - அவருடன் தேறினவர்கள் அநேகர் அதற்குப் பிறகு, பாரிஸ்டர் ஆனவர்களின் தொகை ஏராளம். சிறு வயதிலேயே அவருக்கு அருள் கிடைத்தது. அம்மை யப்பன் அவர்முன் தோன்றி, அகில உலகும் புகழும் நிலையை நீ பெறப்போகிறாய்--- ஆகவே நீ,கிழக்குமுகமாகப் பார்த்தபடி பத்மாசனத்திலே அமர்ந்து. பத்து ஆண்டுகள் நம்மை நோக்கித் தவம் கிடக்கவேண்டும் என்று அருள, அம் மொழிப்