பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் சிந்திய இரத்தம் 45 படியே அழகான ஆற்றோரத்திலே ஓர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, மோகன்தாஸ் தவம் செய்தார் - அதன் பலனாக அவர்முன் மும்மூர்த்திகள் தோன்றினர் - என்று வழக்கமாகப் பெரியோர்களைப்பற்றிக் கூறப்படும் புராணமும் இவருடன் இல்லை. ஆருடம் கூறுபவர்கள்கூட அவர் அகில உலகப் புகழ் பெற்றபிறகு, அவருடைய 'ஜாதகம்' அப்படிப்பட்டது என்று கூறினரேயொழிய, அன்னையின் மடியிலே குழந்தை தவழ்ந்த போது, ஆசானிடம் பாடம் கேட்டபோது, ஆங்கில நாட்டிலே படித்தபோது, ஆப்பிரிக்காவிலே உரிமைப்போர் துவக்கிய போதுங்கூட, அவர், அகில உலகும் அதிசயிக்கத்தக்கவராக விளங்குவார் என்று முன் கூட்டி ஆருடம் கூறவில்லை. இவைகள் ஏதுமின்றி, நம்மில் ஓருவராகவே இருந்தார். ஆனால் இன்று நாமும், உலகிலுள்ள நல்லறிவாளர்கள் அனை வரும், உத்தமர், உலகைத் திருத்த உழைத்தவர் என்று உள்ளம் உருகி உரைத்திடத் தக்க உயர்நிலை அடைந்ததுடன், உலக வரலாற்றிலே. உன்னதமான இடம்மட்டுமல்ல நிரந்தர மான இடத்தையும் பெற்றுவிட்டார், முன்பு கூறியபடியே, அவருடைய பிறப்பு, வளர்ப்பு ஆகியவற்றிலே அற்புத சக்திகள் உடன் இருந்திருக்குமானால். அவருடைய இன்றைய உயிர்நிலை குறித்து அதிசயப்படத் தேவையில்லை!-அவர் அவ்விதமான சக்திகளோடு பிறந்தார் என்று கூறத் தோன்றுமேதவிர, அதிசயிக்கத் தோன்றாது. ஆண்டவனின் சக்தி அதனால் விளங்கிடும் அளவுக்கு அவர்பற்றி இராது. ஆனால் உண்மையான பெருமை. உண்மையாள சிறப்பு. அவர் அவ்விதமாக அதிசயப் பிறவி யல்ல நம்போன்றவர் ஆனால், நாம் கண்டு அதிசயிக்கத் தக்கபடியான உயர்நிலை பெற்றார் என்பதிலேதான். இருக் கிறது. தேன் இனிப்பாகத்தான் இருந்து தீரும். வாதம் தேவையில்லை அதை விளக்க சிபார்சு தேவையில்லை அதைப்