பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உலகப் பெரியார் காந்தி பருக தேன் எவ்வளவு இனிப்பாக இருக்கிறது தெரியுமா என்று கூறினால், கேட்பவர்கள் சிரித்துவிட்டு, இது என்ன பேச்சப்பா -தேன் இனிக்காமல் வேறெப்படி இருக்கும் என்று கூறுவர் அதுபோலவே தேவபுருஷர்கன், அற்புதம் புரி வோர் என்று முத்திரை பொறிக்கப்பட்டு, கதைகள் சேர்க்கப் பட்டு. உலகிலே உலவுவோர் உலகிளரின் வணக்கத்துக்கு உரியவராவது சகஜம். ஆனால், மோகன்தாஸின் சிறுபிராய முதல். இதுபோல ஏதும் அதிசயம் நிகழாமலிருந்தும், அவர் இன்று அடைந்திருக்கும் உயர்நிலை, நமக்கு நாம் இதுவரை சுறந்துபோன அதிசய புருஷர்களை எல்லாம்கூட நம் கவளத் துக்கும் கொண்டு வருகிறது என்றால், அந்த உத்தமருடைய உண்மையான பெருமை, இந்தச் சூட்சமத்திலேதான் இருக் கிறது. இதனைத்தான் உலக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கலமின்றிக் கடலைக் கடப்பது எப்படி அற்புதச் சக்தி என்று கருதவேண்டுமோ, அதுபோலவே, அற்புதப் பிறவி என்ற நிலை இன்றி எல்லோரையும் போலவே பிறந்து, எல்லோருக் கும் மேம்பட்டவராக, மகாத்மாவாக, மாநிலத்தவரால்கொண் டாடப்படுவது என்றால், அதுதான் உண்மையிலேயே உயர்வு. இராமகிருஷ்ண அவதாரங்களோ, ஆழ்வாராதி நாயன் மார்களோ, சித்தர்கள் ஜீவன் முக்தர்களோ தாங்கள் மக்கள் உருவிலே இருக்கும்போதே, மக்களின் சுபாவத்தை மீறிய சக்திகளைப் பெற்றிருந்தனர் என்று கதைகள் உள்ளன. பூதகியைக் கொன்றார், தாடகியைக் கொள்றர், காளிங்க மடுவில் குதித்தார், கடலுக்கு அணையிட்டார் என்பன போன்ற கதைகள் மூலம், அவர்கள் கடவுள் என்ற கருத்து பரப்பப்பட்டது-எளவே அவர்கள் புகழ்பெற்று விளங்கி யதிலே, நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் இந்த உத்தமர் - மானிட குலம் - அந்தக் குலத்துக்கு எந்தவிதமான ஆற்றல் உண்டோ, அதேவிதம் பெற்றா - இருந்தும், மானிட சூலத்துக்கு வழிகாட்டி என்றும், உலகப் பெரியார் என்றும், எல்லா நாட்டிலேயும் போற்றப்படும் நிலையைப் பெற்றர் அவர் பெருமை இதிலேதான் இருக்கிறது அவருடைய