பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் சிந்திய இரத்தம் 47 மறைவால் உள்ளம் உருகும் நிலை ஏற்பட்டதன் முக்கிய காரணம் இதுதான். இராமகிருஷ்ணர்கள் என்ற புராண புருஷர்கள் போலல் லாமல், நமது காலத்தவர், மானிட குலத்தவர், மற்றவர் போலவே இயல்பான சக்திகளையே உடன்கொண்டு பிறந் தவர், எனினும், இன்று அவர், மற்றவர் சாதிக்காத காரி யத்தைச் சாதித்திருக்கிறார். எனவேதான் நமது உள்ளத்திலே அவருக்கு உயர்ந்த இடம் கிடைத்திருக்கிறது. மக்கள் மனதிலே இடம் பெற்றார் என்பது மட்டுமல்ல, இந்த அளவு உயர்வுபெறுவதற்காக அவர் நாட்டின் நடவடிக் கைகளைக் கவனிக்க மறுத்து, மக்களின் சுக துக்கங்களைப் பற்றிய நடவடிக்கைகளிலிருந்து விலகி, யோகம், யாகம் செய்துகொண்டே இருந்து விடவில்லை. காதகனின் கைத் துப்பாக்கிக்குப் பலியாகும் கடைசி நிமிஷம் வரையில், மக்க ளோடு மக்களுக்கான காரியத்தை, தந்நலமற்ற முறையிலே, மகத்தான வெற்றியுடன் செய்து வந்திருக்கிறார் இதனைக் கவனிக்கும்போது, அற்புதம் செய்தவர்கள் என்போரிடம் ஏற்பட முடியாத பற்றும் பரிவுக், மதிப்பும் இவரிடம் ஏற்படு கிறது. அழகிய ரோஜாவுக்கு, அற்புதமான வர்ணம் தீட்டிப் பார்க்க வேண்டுமல்லவா! நம்மைச் சொக்கவைக்கும் மயிலின் நோகைக்கு, பட்டாடை போர்த்த தேவையில்லை யல்லவா! முல்லைக்கு மணமும், தேனுக்கு இனிப்பும், தாம் கூட்டத் தேவையில்லையல்லவா! அதுபோலவேதான், எந்த உத்தமரின் மறைவு கேட்டு உலகம் உருகி அழுகிறதோ, அவருடைய உயர்வுக்கு அவருடைய குணமும் செயலும், அவர்பெற்ற வெற்றிகளும், அதற்காக அவர் பட்ட கஷ்டங் களும், போதுமான காரணங்கள் - அவருடைய பெருமையை விளக்க நாம் ஏதும் புராணப்பூச்சு போடத் தேவையில்லை. அவர் குருடனுக்குப் பார்வை வரச்செய்தார் முடவனை எழுந்து நடக்கச்செய்தார். ஊமையைப் பேசவைத்தார். மாயாஜாலங்களைச் செய்தார், கந்துக மதக்கரியை வசமாய் நடத்திடும் சித்து விளையாடினார் என்று மகான்களைப்பற்றி