பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உலகப் பெரியார் காத்தி அவர்களில், மக்களிடையே கதைகள் உலவுவதுண்டு, யாரேனும் ஏதேனும் ஓர் அதிசயச் செயல் செய்திருப்பினும், அவர்களின் பெருமையையும் ஆண்டவன் அவர்களிடம் காட்டிய அன்பையும் விளக்கமட்டுமே அவை உதவும். யாரோ ஒருவருக்கு. யாரோ ஒரு மகான் கண் பார்வை வரச் செய் தார். குருடு யாருக்கும் ஏற்படாதபடிச் செய்துவிடவில்லை. மறைந்த உத்தமர், இப்படிப்பட்ட சித்துக்கள் விளையாட வில்லை சித்து விளையாடினவர்கள் செய்ததாகக் கூறப்பட்ட அற்புதங்கள், இவருடைய மகத்தான வெற்றிகளின் முன்பு, சிறு துரும்பு. ஒருவருக்குக் கண் பார்வை உண்டாக்கச் செய்த மகான்கள் இருக்கட்டும் ஒருபுறம் இது நமது நாடு. ஆங்கி லருக்கு வேட்டைக்காடு ஆகிவிட்டது - நாம் பலகோடி, அவர்கள் சில இலட்சம் நாம் அடிமைகள், அவர்கள் ஆட்டிப் படைப்பவர்கள் என்ற நிலை தெரியாதிருந்த குருடர்க ளாக நம் நாட்டவர் கோடிக்கணக்கிலே இருந்தனர்; மறைந்த உத்தமர், அவர்களின் கண்களைத் திறந்தார்; என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் அடைத்துப்போயிருந்த மக்களைப் பேசவைத்தார் - உரிமைப்பற்றி - உறுதியுடன் எப்படிப் பெறு வது என்று தெரியாமல், முடவன் நிலையில் இருந்தவர்களை கச்சைகட்டி நின்று, கடும் போரிட வைத்தார். பலகோடி மக்களுக்குப் பார்வை. பேச்சு, செயல், திறமை இவ்வளவை யும் உண்டாக்கினார் இந்த உத்தமர். அற்புத நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கூறப்படும் அருளுடையார்கள் இருந்த போதுதான், ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்தினாள். அந்த அடிமைத் தலைகளை உடைத்தெரிந்தவரை, அவர்க ளோடு சேர்த்துப் பேசுவது, அவருக்குக் கௌரவம் என்று எண்ணுபவர்கள், உத்தமரின் உயரிய பண்புகளைச் சரியாக உணராதவர்கள் என்றே பொருள்படும். அவருடைய வெற்றி