பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். அவர் சிந்திய இரத்தம் 49 மகத்தானவை - அவைகளைவிட மகத்தானது. அவர் உண்டாக்கிவைத்துவிட்டுப் போயிருக்கும். மாண்புகள் அன்னிய ஆட்சியை விலக்கவோ. அதற்கான விடுதலைப் போர் துவக்கும் உணர்ச்சியையும் உறுதியையும் மக்கள்பெறச் செய்யவோ முடியாதவர்களை எல்லாம், 'அற்புதம் தெரிந்த வர்கள். அருள்பெற்றவர்கள்” என்று கூறிக்கொண்டிருந் தளர் - மக்களும் அதை ஏற்று அவர் அடிதொழுதனர். அதே போது. அவர்கள் யாரும் சாதிக்காததைச் சாதித்தனர். 1922ம் ஆண்டு பிப்ரவரி 16ந்தேதிய "யங் இந்தியா' பத்திரிகையில் "என்னிடமிருப்பதா நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஒரே குணம், சத்தியமும் அஹிம்சையும்தான். மனிதருக்கு மேற் பட்ட சக்தி எதுவும் எளக்கு இல்லை; திடசித்தமில்லாத மற்ற வர்களுக்கு. கெடுதலை நாடிவிடக்கூடிய எந்தச் சதை உண்டோ. அதே சதையாலானவனே நானும்" என்று எழுதினர் - இருபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு. . இப்போதும், மக்களின் பாராட்டுதலைப்பெற்றுப் பூரிக்கும் பழைய சக்திகளிடம் கேட்டுப்பாருங்கள்! இப்போதும், தமது வீரதீரத்தையும், அருள்பெற்று ஆற்றலுடையோராக இருப்பதையும் கூறுவர். அவர்கள் கூறட்டும் மக்கள் இனி யும் அவர்களின் உரையை ஏற்கலாமா - அந்தப் பழைய சக்தி களைப் பாராட்டவும், அவைகளுக்கு வணக்கம் செய்யவும் முற்படுவது சரியாகுமா? முற்றும் துறந்த முனிவரின் சொந்த ஆஸ்தி இவைதாள், என்று 'தினசரி ' யில் ஒரு படம் வெளி வந்தது, காந்தியாரின் சொத்துக்களைக் காட்ட அந்தப் படத்தைக் கண்ட எவருக்கும் கண்ணீர் கசியாமலிராது! என்ன சொத்து? நூல்சரம்; சிறு கரண்டி, தெர்மாஸ்பிளாஸ்க், ஒரு பவுண்டன் பேனா, ஒரு ஜதை காலணி இவை. அருள்