பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உலகப் பெரியார் காந்தி பெற்றவர்கள்,யோகமறிந்தவர்கள். மக்களின் மோட்சலோக வழிகாட்டிகள் என்றெல்லாம் விருதுபெற்று துறவு நிலையும் கொண்டிருப்பதாகக் கூறுபவர்கள் இன்றும் பலர் உள்ளனரே அவர்களின் சொத்துக்களை சற்று உங்கள் மனக்கண்முள் கொண்டுவந்து பாருங்கள் - எவ்வளவு ஆடை ஆபரணம் - தங்கத்தால் வட்டில் தட்டு முதலியன மட்டுமா, பாதக்குறடே தங்கத்தால்! இவர்களையும், முற்றும் துறந்தவர்கள், முனிவர் கள், மக்களின் அன்புக்குமட்டுமல்ல, ஆராதனைக்கும் பாத்திர ராகக்கூடியவர்கள் என்று, இனியும் கொள்ள எப்படி மக்களின் மனம் சம்மதிக்கும்? சாதாரண காய்ச்சலுக்கு. ஒரு வைத்தியர் கொடுத்த மருந்து பயனற்றுப்போய், வேறொரு வைத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்து, ஜூரம் நீங்கிவிட் டால் என்ன சொல்கிறோம்? முன்னவரின் முறை சரியில்லை. மருந்து பயனில்லை என்று கூறிவிடுகிறோமே. இதோ ஒரு நாட்டின் நலிவை, மக்களின் நிலையை மாற்ற நமக்குத் தலை முறை தலைமுறையாக இருந்து வந்தவர்களால் முடியாமற் போனபிறகு, அவர்களைம்போல. 'நான் அற்புதம் புரியவன்'. என்று கூறிக்கொள்ளாமல், பணிபுரிந்து, வெற்றிகண்டு, கடைசியில் நாட்டிலே வருப்பு மாச்சரியம் ஒழித்து, புது வாழ்வு ஏற்படவேண்டும் என்பதற்காக உயிரையே கொடுத் தாரே ஓர் உத்தமர், அவரைப் போற்றும் அதே வாயினால். எப்படி அந்தப் பழைய சக்திகளின் பிரதிநிதிகளைப் புகழ்வது? பழைய சக்திகளின் பிரதிநிதிகளும், இனியும், தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது அழகல்ல, அறமுமாகாது என்பதை அறிந்து, அவர்களின் போக போக்கிய நிலையையும், அதைக் காப்பாற்ற அவர்கள் கையாளும் முறைகளையும் விட்டொழித்து, உத்தமர் உரைத்த உயரிய கொள்கைகளை ஊருக்கு உரைக்கும் உயர் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். அவர்களுக்குத்