பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக உத்தமர் காந்தி உலக உத்தமர், மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் தாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம் ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது, இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப்பற்றிப் பேசாத நாடில்லை எழுதாத ரடில்லை. எங்கும் கலக்கம் ஏக்கம் - எவருக்கும் தாங் கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றி பேச முனை கிறோம் ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை- துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை எண்ணுவோம். ஆறுதல்பெற முயற்சிப்போம் நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார்; அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்